ஆடி அமாவாசை; அதிகாலை முதலே அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

Published : Aug 16, 2023, 11:20 AM IST
ஆடி அமாவாசை; அதிகாலை முதலே அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்

சுருக்கம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.

பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்தில் தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோரை வழிபடுவது வழக்கம். இந்நிலையில், ஆடி அமாவாசையையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் நேற்று மதியத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் குவியத் தொடங்கினர்.

அக்னி தீர்த்த கடலில் அதிகாலையில் புனித நீராடிய பக்தர்கள் பித்ருக்களுக்கு பிண்டம், எள் வைத்து தர்ப்பணம் செய்து, முன்னோருக்கு பூஜைகள் செய்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 21 புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசல் மிகுதியால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கொட்டகையில் இருந்த தீவனங்களை தின்றுவிட்டு விநாயகருக்கு வணக்கம் வைத்துவிட்டு சென்ற காட்டு யானை

கோவிலின் நுழைவு வாயிலில் பக்தர்கள் உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலான இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாதிய கொடுமைகள்; எவிடென்ஸ் கதிர் ஆவேசம்

ஆடி அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி முதல் 5:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை, அதைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை உள்ளிட்ட கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. நண்பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ஸ்ரீராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக பகல் முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனைக்கு பின், இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கருட வாகனத்தில் ஸ்ரீராமர் புறப்பாடு நடைபெற உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Spiritual: நொடியில் ஓடி மறையும் கடன் தொல்லை.! கோடீஸ்வர யோகத்தை தரும் பரிகாரங்கள்.!
Spiritual: மருதாணி செடியை பூஜித்தால் இவ்ளோ நன்மைகளா?! வழிபாடு செய்ய ஏற்ற நாள் இதுதான்!