இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை.. எதை கடைபிடிக்க வேண்டும்?

By Ramya s  |  First Published Jul 1, 2023, 8:12 AM IST

இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஆடி 1 அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16-ல் அமாவாசை வருகிறது.


அமாவாசை என்பது இந்துக்களின் முக்கிய விரதநாளாகும். ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் அமையும் நாளே ஆடி அமாவாசை ஆகும். சந்திரன் என்றால் தாய், தாய் வழி உறவினர்கள். சூரியன் என்றால் தந்தை. தந்தை வழி உறவினர்கள். இவர்கள் இணையும் அமாவாசை நாளில் மறைந்த முன்னோர்களில் அருள் மற்றும் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையன்று முன்னோர்க்கு ‘ பிதுர் கடன்’ கொடுத்தால் அது அவர்களை நேரடியாக சென்றடையும் என்பதும் நம்பிக்கை.

அந்த வகையில் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் மிகுந்த சிறப்பு வாய்ந்தவை. அந்த வகையில் இந்த ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. ஆடி 1 அதாவது ஜூலை 17, ஆடி 31 – ஆகஸ்ட் 16-ல் அமாவாசை வருகிறது.

Tap to resize

Latest Videos

கனவில் கட்டிடம் இடிந்து விழுவதைப் பார்த்தால் என்ன அர்த்தம்?! வாழ்க்கையில் என்ன நடக்கும் தெரியுமா?

இதில் எதை கடை பிடிக்கலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில், இரண்டையுமே கடைபிடிக்கலாம் என்று சாஸ்திர பண்டிதர் தெரிவித்துள்ளார். காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த சாஸ்திர பண்டிதர் சுந்தரராம வாஜ்பாய் ” இந்த ஆண்டு ஆடி மாதம் 2 அமாவாசை வருகிறது. இதில் முதலில் வரும் ஆஷாட அமாவாசையை கடைபிடித்தால் விசேஷம். ஆடி இறுதியில் வரும் அமாவாசையையும் கடைபிடிக்கலாம். 2 அமாவாசைகளை கடை பிடிப்பதும் நல்லது தான்.” என்று தெரிவித்தார்.

வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பொங்க...கடவுளுக்கு தேங்காயை இப்படி சமர்பியுங்கள்..!!

click me!