Premature Aging Reasons : சில விஷயங்களை உங்கள் வாழ்க்கை முறையில் பின்பற்றினால் போதும் உங்கள் சருமத்தை நீங்கள் வயதாவதிலிருந்து பாதுகாக்கலாம். அதற்கான சில வழிகளை குறித்து இங்கே பார்க்கலாம்.
வயதாவது ஒரு பொதுவான விஷயம் அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இளமையிலே முதுமை அடைவது ரொம்பவே மோசமான விஷயம். ஆம், இன்றைய காலகட்டத்தில் சிலருக்கு 20 வயது தான் இருக்கும். ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வயதான தோற்றத்தில் இருப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான்.
அதிகப்படியான காற்று மாசுபாடு மற்றும் பிற தூசி துகள்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும். எனவே, இதற்கு தோல் பராமரிபும், உணவு முறையும் மிகவும் அவசியம். இந்தப் பிரச்சினைகள் சருமத்தை எப்படி பாதிக்கின்றன. உண்மையில், சருமம் வயதாக தெரிவதற்கான காரணங்கள் என்ன? தோலில் கோடுகள் மற்றும் புள்ளிகள் தோன்றுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
undefined
இளமையிலேயே முதுமை அடைவதற்கான காரணங்கள் இங்கே:
நீரிழப்பு:
சருமம் சோர்வடைவதற்கும், மந்தமாக இருப்பதற்கும் முக்கிய காரணங்களில் ஒன்று உடலில் நீர் பற்றாக்குறை இருப்பது தான். எனவே உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. உங்களுக்கு தெரியுமா.. நீரிழப்பு தோல் சேதத்தில் இருந்து தன்னைத்தானே சரி செய்யும் திறனை பாதிக்கும். இது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை குறைத்து, சுருக்கங்களை அதிகமாக ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: Beauty Tips : வயதானாலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்க பெஸ்ட் ஃபேஸ் பேக் இதுதான்!
வைட்டமின் சி குறைபாடு:
இளமையிலேயே முதுமையாக தெரிவதற்கு மற்றொரு முக்கிய காரணம் வைட்டமின் சி குறைபாடு தான் வைட்டமின் சி நமது சருமத்திற்கு மிகவும் அவசியம். இதன் குறைபாடற்றால் தான் சருமம் இளமையிலேயே முதுமை அடைகிறது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் தோல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிப்பதால், உங்கள் உணவின் மூலம் வைட்டமின் சி பெற்றுக் கொள்ளுங்கள். வைட்டமின் சி காலேஜ் அண்ட் 30 அதிகரிக்க செய்வதால், இது சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.
சன் ஸ்கிரீன் பயன்பாடு இல்லாததால்:
உங்களுக்கு தெரியுமா.. சன் ஸ்கிரீன் சருமத்திற்கு மிகவும் முக்கியமானது என்று. ஆனால், சிலர் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதில்லை. அதுமட்டுமின்றி, நீங்கள் சரியான சன் ஸ்கிரீனை தேர்வு செய்து பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் முறையற்ற பராமரிப்பு சருமத்தை மோசமாக பாதிக்கும். இதனால் அரிப்பு, வீக்கம் மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, நீங்கள் எப்போதும் வெளியும் செல்லும்போது நல்ல சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். இல்லையெனில், சூரிய ஒளியின் தாக்கம் உங்கள் சருமத்தை மோசமாக பாதிக்கும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் கருவளையங்கள் மற்றும் ஹைப்பர் பிக்மெண்டேஷன் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: தினமும் இரவு தூங்கும் முன் 'இத' முகத்தில் தடவுங்க... இனி முக சுருக்க பிரச்சினை வராது!
மன அழுத்தம்:
அதிக மன அழுத்தத்தால், சருமம் தன் அழகை இழக்கும் தெரியுமா..? ஆம், அதுதான் உண்மை. 20 வயதிற்கு பிறகு அதிக மன அழுத்தம் ஏற்படலாம். இந்த மன அழுத்தம் உங்கள் தோல் சுருக்கத்திற்கு முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி நாள்பட்ட மன அழுத்தம் உடலை பல்வேறு வழிகளில் பாதிக்கிறது. குறிப்பாக ரத்த ஓட்டத்தை பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் குறைவாக இருக்கும். இதனால் கருவளையங்கள், கரும்புள்ளிகள் மற்றும் கோடுகள் சருமத்தில் ஏற்படும்.