விஜயகாந்த் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் (டிஸ்சார்ஜ்) என்று தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதோடு மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி வீட்டிலேயே அவர் தேவையான மருந்து, மற்றும் சிகிச்சையும் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சமீப காலமாக பொதுவில் தோன்றவில்லை, கடைசியாக சஹாப்தம் (2015) படத்தில் நடித்தார். நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் செய்து அரசியல் தலைவர் நலமாக இருப்பதாக தேமுதிக அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.
மேலும் செய்திகளுக்கு... தமிழ்நாட்டு எல்லையில் மொழி கற்றுக்கொள்ளும் அல்லுஅர்ஜூன்..மாஸாக ரெடியாகும் புஷ்பா 2!
அதில் சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக அப்பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதால் தலைவரின் கால் விரல் ஒன்று துண்டிக்கப்பட்டது. அவர் தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். விஜயகாந்த் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலைதளங்களில் வரும் வதந்திகள் மற்றும் ஊகங்களை நம்ப வேண்டாம் என்றும் தேமுதிக அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதையடுத்து அரசியல் தலைவர்கள், தமிழக முதல்வர், ரஜினிகாந்த் , கமல்ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் 'கேப்டன்' விஜயகாந்த் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... இரவின் நிழல் ரிலீஸ் குறித்த ஹாட் அப்டேட்டை வெளியிட்ட பார்த்திபன்!
நேற்று விஜயகாந்த் அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார் (டிஸ்சார்ஜ்) என்று தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது. அதோடு மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி வீட்டிலேயே அவர் தேவையான மருந்து, மற்றும் சிகிச்சையும் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... அஜீத் குமாரின் சமீபத்திய பைக் ரைட் வீடியோ இணையத்தை உலுக்கி வருகிறது!
இந்நிலையில் தான் விரைவில் குணம்பெற வாழ்த்திய அனைவரும் ட்வீட்டர் பக்கத்தில் நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.
விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள். pic.twitter.com/VA98j7Ymdk
— Vijayakant (@iVijayakant)