Rashmika Mandanna : ராஷ்மிகா தான் நடித்துள்ள புஷ்பா படத்திலிருந்து வெளியாகியுள்ள சாமி சாமி பாடலுக்கு நடமாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
இரண்டு பாகமாக இப்படம் வெளியாகி உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது. இரண்டாம் பாகத்தை அடுத்தாண்டு வெளியிட உள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புஷ்பா படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் சமீபத்தில் மூன்றாவது சிங்கிளாக வெளியான "சாமி சாமி" பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் இதுவரை - 250 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.
இந்நிலையில் ராஷ்மிகா தான் நடித்துள்ள புஷ்பா படத்திலிருந்து வெளியாகியுள்ள சாமி சாமி பாடலுக்கு நடமாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார்.