சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ படம் பாகம் ஒன்று, இரண்டு ஆகியவற்றின் வெற்றிக்கு பின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ள திரைப்படம் தான் ரத்தம். விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்திருக்கிறார். இதுதவிர நந்திதா, ரம்யா நம்பீசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கண்ணன் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள ரத்தம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரத்தம் படம் போரிங் ஆக இருப்பதாகவும், படத்தின் ஒன் லைன் சூப்பராக இருந்தாலும் அதனை வேஸ்ட் செய்துள்ளனர். 40 நிமிடங்களுக்கு அப்புறம் தான் கதைக்குள்ளயே போகிறது படம். விஜய் ஆண்டனிக்கும் மகிமா நம்பியாருக்கும் இடையேனான உரையாடல் மட்டுமே நன்றாக உள்ளது மற்றபடி படத்தில் ரசிக்கும்படியான காட்சிகள் சுத்தமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
- Boring!
Good line wasted. Gets into the story only after 40 long minutes, yet falls flat. Conversation scene b/w VJAntony and Mahima was good, other than that 0 interesting scenes.
Wasted.! https://t.co/9yZowEFATK pic.twitter.com/xFp5nCDF0A
ரத்தம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பத்திரிகை புலனாய்வு திரில்லர் திரைப்படம். விஜய் ஆண்டனியின் நடிப்பு அருமையாக உள்ளது. மகிமா நம்பியாரும், நந்திதாவும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். சி.எஸ்.அமுதனிடம் இருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. அவரின் டீடெயிலிங் மிகவும் சர்ப்ரைஸ் ஆக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
- 3.75/5 💥
A must watch journalistic investigative thriller.. performance was amazing and best in recent times.. and did a great job too.. Unexpected outing from director totally surprised with his detailing 👌
ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு நன்றாக உள்ளது. மெதுவாக தொடங்கினாலும் இண்டர்வெல்லுக்கு முந்தைய காட்சி ஓகே வாக இருந்தது. படத்தின் நீளம் மற்றும் விறுவிறுப்பில்லாத திரைக்கதை, இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். பிலோ ஆவரேஜ் தான் என குறிப்பிட்டுள்ளார்.
Good 👍🏼Slowly Started pre interval Portion ok✌🏼Lengthy😪Boring Screenplay,no songs,Could have been better🤷🏽♂️below average🙃 pic.twitter.com/RMGOT39t4i
— HARI HARAN (@Hari_offcl65)ரத்தம் சர்ப்ரைஸ் ஆன படமாக உள்ளது. 25வது நிமிடத்தில் இருந்து தான் படம் பிக் அப் ஆனாலும், இறுதிவரை இந்த புலனாய்வு திரில்லர் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் சிஎஸ் அமுதன். விஜய் ஆண்டனியின் சமீபத்திய படங்களில் இது சிறப்பான படமாக இருக்கும் நான் என்ஜாய் பண்ணேன் என பதிவிட்டுள்ளார்.
(3.5/5) - What a solid surprise. pins us with an interesting and engaging investigative thriller that picks up from the 25th minute and travels superbly until the end. Easily, this is 's best film in recent times, enjoyed it.
— Siddarth Srinivas (@sidhuwrites)பிளாக் காமெடி என்கிற தனது கம்பர்ட் ஜோனில் இருந்து விலகி தற்போதைய அரசியலை மையமாக வைத்து ஒரு திரில்லர் படத்தை எடுத்துள்ளார் சிஎஸ் அமுதன். விஜய் ஆண்டனியினுள் இருக்கும் மற்றொரு கருப்பு பக்கத்தை இண்டர்வெல்லில் காட்டி இருக்கிறார். குதிரை சேசிங் சீன் சிறப்பாக படமாக்கப்பட்டு உள்ளது. விஜய் ஆண்டனியை வித்தியாசமாக காட்டி உள்ளார். மகிமா நம்பியார் அருமையாக நடித்துள்ளார். எடிட்டர் சுரேஷின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக்கி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
- Review: Hooks you straightaway! moves away from his comfort zone (black humour laced comedies) to a new-age taut technology related thriller which is relevant in today’s politics.
The interval block socks it in, as the viewers find out the surprising dark… pic.twitter.com/HYytGM8fmz
இதையும் படியுங்கள்... விடுதலை ஆகிறார் மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர்! மோசடி வழக்கில் சிக்கியவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது எப்படி?