மாரி செல்வராஜ் சம்பவம் பண்ணினாரா? சலிப்படைய வைத்தாரா? - மாமன்னன் படத்தின் விமர்சனம் இதோ

By Ganesh AFirst Published Jun 29, 2023, 9:30 AM IST
Highlights

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கர்ணன், பரியேறும் பெருமாள் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். உதயநிதியின் கடைசி படம் இது என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி வடிவேலு, பகத் பாசில் உள்பட ஏராளமான முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று பக்ரீத் விடுமுறையை ஒட்டி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. மாமன்னன் படத்தின் முதல் காட்சியை வெளிநாட்டில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் அடுத்தடுத்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அந்த விமர்சனங்களை தற்போது இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... என் கருத்திற்கு வலிமை சேர்க்கும் 'மாமன்னன்'..! வாழ்த்து கூறிய கமல்ஹாசன்..!

பிளஸ், மைனஸ் என்ன?

மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசிலின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகிய பாடல்கள், மேக்கிங், டைரக்‌ஷன், இண்டர்வல் சீன் ஆகியவை பிளஸ் ஆக அமைந்துள்ளது. எமோஷன்கள், இரண்டாம் பாதியில் வரும் சீன்கள் மற்றும் படத்தின் நீளம் ஆகியவை மைனஸ் ஆக அமைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.



Plus:

- Vadivelu, Fahadh Fasil Perf
- Songs
- Direction & Making
- Interval Block

Minus

- Emotions
- 2nd Hlf Scenes
- Pace/Length

IMO : Karnan > PP > Maamannan.

— Christopher Kanagaraj (@Chrissuccess)

வரலாற்று பொக்கிஷம்

ஒடுக்கப்பட்டவனின் வலிகளையும் சமத்துவத்தின் வேர்களையும் விளுமியங்களின் எல்லைகளையும் அழுத்தமாக முற்றோப்பு மாயைகளின் வீழ்ச்சிகளையும் தீண்டாமை ஆழ்ந்த கருவுருவாக்கங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்தப்படம் ஒரு வரலாற்று பொக்கிஷம் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்டவனில் வலிகளையும் சமுத்துவத்தின் வேர்களையும் விளுமியங்களின் எல்லைகளையும் அழுத்தமாக முற்றோப்பு மாயைகளின் வீழ்ச்சிகளையும் தீண்டாமை ஆழ்ந்த கருவுருவாக்கங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் இந்தப்படம் ஒரு வரலாற்று பொக்கிஷம் pic.twitter.com/5qxyBNNqBh

— Tubelight (அன்பு செய்வோம்)❣️ (@Blink_Blng)

இண்டர்வல் சீன் சூப்பர்

மாமன்னன் மூலம் மாரி செல்வராஜ் அற்புதமான கதையை சொல்லி உள்ளார். நாயகன் தான் சில இடங்களில் செட் ஆகாதது போன்று தோன்றுகிறது. இண்டர்வல் சீன் சூப்பர். இசையால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான், படம் முழுக்க வடிவேலுவும், பகத் பாசிலும் சிறப்பாக நடித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

8.5/10 .. mari selvaraj tells an amazing story … hero seems to be a misfit at times ..

interval block 👌👌. Music by ARR complements the movie .. vadivelu and fahadh fazil were brilliant through out ..

— హిట్లర్ 😈 (@nikil_verma)

மாஸ்டர் பீஸ்

விஸ்வரூபமெடுக்கும் ஒடுக்குமுறையை மாரி போன்ற ஒரு இயக்குனர் எப்படி படமாக்குவார் என்று நினைக்க வேண்டாம். முதல் பிரேமில் இருந்தே பிரம்மிக்க வைத்துள்ளார். அவரது எழுத்து மிகவும் உன்னதமானது. அதைவிட முக்கிய காட்சிகளை அவர் இயக்கிய விதம் அவ்வளவு அழகு. இதுவரை ஒடுக்குமுறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படங்களில் இது சிறப்பான படமாக உள்ளது. கதாபாத்திரங்கள், எழுத்து மற்றும் இயக்கம் என ஒரு சிறந்த மாஸ்டர் பீஸ் படைப்பை கொடுத்திருக்கிறார்.

WE ARE LIVING IN THE AGE OF MARI SELVARAJ.

One of the best, brutal, and satisfying looks at oppression that has Ever been created. Mari subverts every one of the classic things he's done in the past and creates a characterization, writing and directorial masterpiece https://t.co/auyiDCukKj

— Sai_Reviews (@saisaysmovies)

அசுரனை மிஞ்சிட்டான்

மாமன்னன் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் மாமன்னன் படம் அசுரனை மிஞ்சி நிற்கிறான் என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

அசுரனை மிஞ்சி நிற்கிறான் 🔥

— 𝕯𝖗𝖊𝖆𝖒 𝖍𝖆𝖈𝖐𝖊𝖗 (@Durai_talks)

வடிவேலு வெறித்தனம்

மாமன்னன் என்கிற ஒரு பிரம்மிப்பூட்டும் படத்தை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். உதயநிதிக்கு இது கம்பேக் படம், அற்புதமாக நடித்துள்ளார். வடிவேலு வேறலெவல். தலைவி கீர்த்தி சுரேஷ் நடிப்பு கவர்கிறது. இண்டர்வல் மாஸ் ஆக உள்ளது. பின்னணி இசை பக்கா. கிளைமாக்ஸில் வடிவேலு வெறித்தனமா நடிச்சிருக்கார் என பாராட்டி உள்ளார்.

massive to watch what a movie sir come back sir amazing acting and sir marvellous wow thalaivii stunning acting interval mass bgm scoring pakka
Climax verithanama daa paa vadivelu sir verithanam 🔥🔥🔥💯

— ROHITH KUMAR Y (@Rohithkumar0039)

தரமான ஒளிப்பதிவு

மாமன்னன் முதல் பாதி சூப்பர், இண்டர்வல் சீன் வெறித்தனம், இரண்டாம் பாதி ஆவரேஜ் தான். மொத்தத்தில் ஓகேவான படமாக உள்ளது. வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பு வேறலெவல், ரகுமானின் பின்னணி இசை சூப்பர். ஒளிப்பதிவு தரமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

USA
First half super...interval bang 🔥 second half average....overall ok.. vadivel and fafa 🔥 Rahman bgm 👌 👍 cinematography tharam!!!

— Bittu 💙 (@bittutweets)

தெறி

ஐயா வடிவேலுவுக்கு இது வாழ்நாளில் மறக்கமுடியாத பர்பார்மன்ஸ். பகத் பாசில் வேறரகம். உதயநிதி சிறப்பு. கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார். முதல் பாதியை தெறிக்கவிட்டுள்ள மாரி செல்வராஜ், இரண்டாம் பாதியில் ஏமாற்றம் அளித்துள்ளார். மாண்புமிகு அவைத்தலைவர் சீன் மாஸ் ஆக உள்ளது.


At Charlotte NC. USA.
Iyya Vadivelu -life time performance.
Fahid Faisal - Tremendous
Udhay- Excellent
Keerthi- Good
Mari selvaraj- first half of the movie was “Theri”/ Second half was disappointment.
“மாண்புமிகு அவைத்தலைவர்”
Mass scene. pic.twitter.com/6kiLmF35VL

— Veeran (@Veeran_USA)

வேறலெவல்

வடிவேலு என்ன ஒரு அற்புதமான நடிகர். உதயநிதி, பகத் பாசில் என ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். இசையும், ஒளிப்பதிவும் படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

, .
Vadivelu what a Phenomenal actor he is …Udhay , Fahad everyone has done a fantastic job .🔥🔥. Music and cinematography lifts the movie to a different level . 🔥🤌 pic.twitter.com/Lmb31cVvLR

— RajaSekar (@rajanvagayara)

மாரி செல்வராஜ் சம்பவக்காரன்

சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசுகிறது மாமன்னன். வடிவேலு வில் ஆகவும், உதயநிதி அம்பாகவும், கீர்த்தி சுரேஷ் அதனை எய்துபவராகவும் இருக்கிறார். அவர்களின் இலக்காக பகத் பாசிலின் ரத்னவேல் கேரக்டர் உள்ளது. மாரி செல்வராஜ் நீ ஒரு சம்பவக்காரன் என புகழ்ந்துள்ளார்.



The movie speaks Social Justice and Equality with Vadivelu as a ARROW and na as being BOW and as the archer and finally the TARGET is Temerity of Rathanavel ur a Sambavakaaran
🤝🤝🤝❤️😇🥰

— Jiya Rahman (@jiyathedon)

இதையும் படியுங்கள்... 'தேவர் மகன்' சர்ச்சைக்கு மத்தியில்.. 'மாமன்னன்' படம் பார்த்த கமல்! மாரி செல்வராஜ் போட்ட நெகிழ்ச்சி பதிவு!

click me!