Jailer review : டைகர் முத்துவேல் பாண்டியனாக மாஸ் காட்டினாரா ரஜினி? - ஜெயிலர் விமர்சனம் இதோ

By Ganesh A  |  First Published Aug 10, 2023, 7:38 AM IST

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.


ரஜினிகாந்தின் 169-வது திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரஜினி. இதில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்துள்ளார். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Latest Videos

undefined

ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர். ஜெயிலர் படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கேரளாவில் ஜெயிலர் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்!

மும்பையில் ஜெயிலர் ரஜினி பேனருக்கு ஆராத்தி எடுத்த ரசிகைகள் pic.twitter.com/Q5Iu7gekSb

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

ஜெயிலர் படத்தின் முதல் பாதி தலைவர் மற்றும் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் நிறைந்ததாக இருக்கிறது. ஒரே ஒரு ஆக்‌ஷன் சீன் தான் அதுவும் இடைவேளைக்கு முன் வருகிறது. இரண்டாம் பாதி மாஸ் காட்சிகள் நிறைந்ததாகவும் நிறைய டுவிஸ்ட் உடனும் இருக்கும். ஜெயிலர் உங்களை ஏமாற்றாது என பதிவிட்டுள்ளார்.

Fun filled first half with Yogi Babu and Thalaivar combo !!! Oly one action block for thalaivar at the interval!!! ✌️✌️
Mass filled the second half along with the cameos. And a major twist🔥🔥
Jailer won't disappoint 🔥💯✌️

— Anna (@sk2287425)

நெல்சன் இத்தனை நாள் எங்கய்யா இருந்திங்க? ஜெயிலர அடிச்சிக்கிற மாதிரி இனி எவனும் படம் எடுக்க முடியாது. உங்க அமைதியின் வெளிப்பாடு அதிரடியா இருக்கு. ஜெயிலர் வேறலெவல் படம். என் ரஜினியை இவ்ளோ கெத்தா அழகா காட்டுன உங்களுக்கு கோடி நன்றி என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இத்தனை நாள் எங்கய்யா இருந்திங்க???
வ அடிச்சிக்கிற மாதிரி இனி எவனும் படம் எடுக்க முடியாது. உங்க அமைதியின் வெளிப்பாடு அதிரடியா இருக்கு. வேற லெவல் படம்.
என் ராஜா ரஜினிய இவ்ளோ கெத்தா அழகா காட்டுன உங்களுக்கு கோடி நன்றி.🙏🙏🙏 pic.twitter.com/GRH9vnJHB7

— வெளவால் (@Iam_Bats)

தலைவா நீ இமயமலை போகும் போதே நினைச்சேன், பெரிய சம்பவம் பண்ணிட்டு தான் போறாய் என்று, ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் சம்பவம். படம் இதுவரை தாறுமாறாக இருக்கு என பதிவிட்டுள்ளார்.

தலைவா நீ இமைய மலை போகும் போதே நெனச்சேன் பெரிய சம்பவம் பண்ணிட்டு தான் போறாய் எண்டு sampavamm movie tharu maaru so far 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 pic.twitter.com/sHDSRL4SDT

— M.Rajeevkaran (@rajeevkaran)

முதல் பாதி ஓவர். ஒரு தரமான கம்பேக் படம். நெல்சன் பிண்ணிட்டாப்ல. அனிருத் எங்கிருந்து யா உனக்கு மட்டும் இவ்ளோ வெறி வருது என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

1st half done. 💥💥 one of the finest comeback Nelsonnnn jiii pinittaru... Ani yowww unakku mattum yengirunthi ya evalo veri varthu 🥵💥💥💥🔥🔥🔥🐐🐐🐐

— ஹரிஸ் 4.0🎭 (@AKharish1971)

ஜெயிலர் முதல் பாதி சூப்பராக உள்ளது. முழுக்க முழுக்க தலைவர் சம்பவம். இதேபோன்று இரண்டாம் பாதியும் சென்றால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என குறிப்பிட்டு இருக்கிறார்.

First half was superb & totally engaging 👌
Full of Thalaivar Sambavam 👊❤️‍🔥
If the second half continues on this phase, Blockbuster loading 💯
Nelsaaa🏆⌛

— AmuthaBharathi (@CinemaWithAB)

படம் தரமா இருக்கு. பண்டிகையை கொண்டாடுங்கலே என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு உள்ளார். மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும்போது ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்குமே இது தரமான கம்பேக் படமாக இருக்கும் போல தெரிகிறது. முழு விமர்சனத்தை விரைவில் பார்க்கலாம்.

படம் தரமா இருக்கு.. பண்டிகையை கொண்டாடுங்குலே 🔥🔥💥 | |

— Rajasekar (@prsekar05)

ஜெயிலர் படத்தின் முழு விமர்சனம் இதோ... ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ

click me!