DD returns review : சந்தானம் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ

Published : Jul 28, 2023, 02:02 PM IST
DD returns review : சந்தானம் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ

சுருக்கம்

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ.

சந்தானம் ஹீரோவாக நடித்து ரிலீஸ் ஆகி உள்ள திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ். புதுமுக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும் இதில் மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது.

தில்லுக்கு துட்டு பாணியில் ஹாரர் காமெடி படமாக டிடி ரிட்டர்ன்ஸ் உருவாகி இருக்கிறது. சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியதால் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பதற்காக அவர் காத்திருந்தார். இப்படத்தின் முதல்காட்சி பார்த்த ரசிகர்கள் அதன் விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... LGM Review : சினிமா பயணத்தை சிக்சருடன் தொடங்கினாரா தோனி? - எப்படி இருக்கிறது எல்ஜிஎம்? முழு விமர்சனம் இதோ

முழுக்க முழுக்க காமெடி ரோலர் கோஸ்டராக டிடி ரிட்டர்ன்ஸ் உள்ளது. விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய அளவுக்கு காமெடி காட்சிகள் உள்ளன. இரண்டு மணிநேரம் டென்ஷன் இன்றி சிரித்துக்கொண்டே இருக்கலாம். இனி வரும் காலங்களில் சந்தானம் இதுபோன்ற ஸ்கிரிப்டை தேர்ந்தெடுத்து நடிப்பார் என நம்புகிறேன். பைசா வசூல் படம், இயக்குனருக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கும் பின்னர் ஒரு சரியான ஹாரர் காமெடி திரைப்படமாக டிடி ரிட்டர்ன்ஸ் வந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை பேய் பங்களாவுக்குள் சென்றதும், நிறைய காமெடியான தருணங்கள் உள்ளது. சந்தானம் தனது தரமான காமெடி மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் பிரேம் ஆனந்தின் கதாபாத்திர தேர்வும் சூப்பர் என குறிப்பிட்டுள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் செம்ம காமெடியாக உள்ளது. விழுந்து விழுந்து சிரிக்கக்கூடிய காமெடி காட்சிகள் நிறைய உள்ளன. சந்தானம் புல் பார்மில் இருக்கிறார். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுத்துள்ளனர். விஎப் எக்ஸ் மற்றும் சவுண்ட் எபெக்ட்டும் நேர்த்தியாக உள்ளது. மொத்தத்தில் ஒர்த் ஆன படம் என பதிவிட்டுள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாம் பாதி அல்டிமேட் ஆக உள்ளது. பெப்சி விஜயனை இப்படி யாருமே யூஸ் பண்ணிருக்க மாட்டாங்க. சந்தானம் back with bang என பாராட்டி இருக்கிறார்.

இப்படி நெட்டிசன்கள் டிடி ரிட்டர்ன்ஸ் படம் செம்ம காமெடியாக இருப்பதாக பாராட்டி வருவதை விட, சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் இப்படத்திற்கு முழுக்க முழுக்க பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளதால், இப்படம் லவ் டுடே போல் செம்ம ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மும்பையில் கவர்ச்சி உடையில் வந்து காவாலா டான்ஸ் ஆடிய தமன்னா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?