Leo Review : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி சம்பவம் செய்ததா? சலிப்படைய வைத்ததா? - லியோ விமர்சனம் இதோ

Published : Oct 19, 2023, 07:23 AM ISTUpdated : Oct 19, 2023, 09:33 AM IST
Leo Review : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி சம்பவம் செய்ததா? சலிப்படைய வைத்ததா? - லியோ விமர்சனம் இதோ

சுருக்கம்

Leo movie Review : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் லியோ. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் விஜய் உடன் திரிஷா, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், கவுதம் மேனன், ஜார்ஜ் மரியான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

லியோ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கு தான் லியோ முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டாலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே லியோ படம் ரிலீஸ் ஆகிவிட்டது. அங்கு படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தங்களது எக்ஸ் தள பக்கங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

லியோ எல்சியுவில் தான் உள்ளது. என்ன ஒரு அருமையான படம், முதல் பாதி கூஸ்பம்ப் ஆக உள்ளது. இரண்டாம் பாதி மாஸாக இருக்கிறது. அனிருத் மீண்டும் ஒருமுறை தன்னுடைய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். லோகேஷுக்கு மற்றுமொரு பிளாக்பஸ்டர் படமாக லியோ இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

லியோ ஒரு விஷுவல் டிரீட். கிளீன் ஆன ஆக்‌ஷன் எண்டர்டெயினர். ஆக்‌ஷன் காட்சிகள், விஜய்யின் தோற்றம், நடிப்பு மற்றும் அனிருத்தின் இசை என சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸா இருக்கு. லோகேஷ் கனகராஜ் ஜெயிச்சிட்டயா. சிறந்த அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தன்னுடைய கெரியரில் பெருமை கொள்ளும் படமாக லியோ உள்ளது. படத்தில் ஒரு காட்சியை கூட மிஸ் பண்ணிடாதீங்க. ஒவ்வொரு காட்சியும் முக்கியமானது. சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படங்களின் பட்டியலில் இதுவும் இருக்கிறது. லியோ ஒரு டிரெண்ட் செட்டர் என பதிவிட்டுள்ளார்.

லியோ படத்தின் முதல் பாதி ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல் உள்ளது. இதுவரை பார்க்காத தளபதியை பார்க்கலாம். இதுபோன்ற விறுவிறுப்பான முதல் பாதியை பார்த்ததில்லை. லோகி சொன்னபடி இது 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் தான். இண்டர்வெல் சீனுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் ஸ்டேடியம் போல் மாறிவிட்டது. டைட்டில் கார்டில் இருந்து இண்டர்வெல் வரை மாஸாக உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை தெறிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

லியோ படத்தின் முதல் பாதியில் ஒரு டல்லான காட்சி கூட இல்லை. இதில் வரும் அனைத்து ஆக்‌ஷன் காட்சிகளும் நியூக்லியர் பிளாஸ்ட் தான் என பதிவிட்டுள்ளார். 

லியோ முதல் பாதி அருமையாக உள்ளது. தளபதி விஜய்யின் நடிப்பு உச்சம். ஒவ்வொரு ஆக்‌ஷன் காட்சியும் கூஸ்பம்ஸ் ஆக இருக்கிறது. இண்டர்வெல் காட்சி ஹைலைட்டாக உள்ளது. இரண்டாம் பாதியும் இதேபோல் சென்றால் படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்த்ததை விட படம் சூப்பராக உள்ளது. தளபதி விஜய்யின் சம்பவம் இது. லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான திரைக்கதை, வேறலெவல்யா நீ. அனிருத் வழக்கம்போல் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு சண்டைக் காட்சியும் சிறப்பாக உள்ளது. ஹைனா காட்சி உலகத்தரத்தில் சிஜி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பிளெடி ஸ்வீட் முதல் பாதியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்... Leo : லியோ திரைப்படம் ‘LCU’-ன் கீழ் வருகிறதா, இல்லையா? இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரெட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?