
சினிமா பேக் கிரவுண்ட் கொண்ட குடும்பத்தில் இருந்து தமிழ் திரையுலகில், ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. ஜெயம் படத்தின் வெற்றியை தொடர்ந்து... இவரின் பெயருக்கு அந்த படமே அடைமொழியாக மாறியது. இதை தொடர்ந்து தன்னுடைய கடின உழைப்பால் இன்று முன்னணி நடிகராக மாறியுள்ள ஜெயம் ரவி, கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஜெயம் ரவி, எத்தனையோ ஹிட் படங்களில் நடித்திருந்தாலும்... அவரின் சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில், நடித்த 'தனி ஒருவன்' திரைப்படம் தனித்துவமான ஹீரோவாக இவரை ரசிகர்கள் முன் அடையாள படுத்தியது. இதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகமாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், அருண் மொழி வர்மனாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்த வேடத்திற்கு இவரை விட யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என நினைக்கும் அளவுக்கு நேர்த்தியாக நடித்திருந்தார்.
பொன்னியின் செல்வன் பட வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி நடிப்பில், வெளியான அகிலன், மற்றும் இறைவன் ஆகிய படங்கள் வெளியாகி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில்... இன்று வெளியாகியுள்ள உள்ள 'சைரன்' படமாவது இவருக்கு வெற்றிப்படமாக அமையுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயம் ரவி முதல் முறையாக, வயதான தோற்றத்தில்... எதார்த்தமான ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை அந்தோனி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க, இரண்டாவது நாயகியாக கீர்த்தி சுரேஷ் அதிரடியான போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். யோகி பாபு கோமாளி படத்திற்கு பின் மீண்டும் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளதால்... சீரியஸ் படமாக இருந்தாலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது. இந்த படத்திற்கு இசை அசுரன் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சரி இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் கூறியுள்ள விமர்சனங்கள் இதோ..
இப்படம் குறித்து விமர்சித்துள்ள ரசிகர் ஒருவர் "ஜெயம் ரவியின் நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும் ஜொலிக்கிறது. இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் ஒரு அழுத்தமான கதையை உருவாக்கி கடைசி வரை ரசிகர்களை கவர்ந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் இப்படம் குறித்து, விமர்சித்துள்ளதாவது... "நடிகர் ஜெயம் ரவி இரண்டு வெவ்வேறு பரிமாணத்தில் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக கவனம் ஈர்க்கிறார். யோகி பாபுவின் நகைச்சுவை அருமை. இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் குடும்ப உணர்வுகள் கொண்ட திரில்லர் கதையில் கலக்கி இருக்கிறார். இது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர்! என கூறி இபபடத்திற்கு 5க்கு 3.5 மதிப்பீடு கொடுத்துள்ளார்.
ரசிகை ஒருவர்.. "மிக நல்ல மேக்கிங், ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் அதை அடித்துள்ளனர்.. யோகி பாபு காட்சிகள் எல்லாம் செம. ஜிவி பின்னணி இசை ஒரு பெரிய பிளஸ்.. என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து இப்படத்தை விமர்சித்துள்ள ஒருவர்... "ஜெயம் ரவியின் மனைவியாக நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன்... அழகான மற்றும் பாராட்டத்தக்க நடிப்பு. ஜெயம் ரவி... வயதான கதாபாத்திரம். அருமையாக உள்ளது என தெரிவித்துளளார்.
மொத்தத்தில், சைரன் படத்திற்கு தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால், இப்படம் ஜெயம் ரவிக்கு ஜெயமான வெற்றியை தேடி தந்துள்ளது என்பதில் எந்த மாற்றமும் இல்லை.