மக்களிடம் புழக்கம் இல்லாததால், வங்கிகளில் காத்துவாங்கிய ரூ.2000தாள் மாற்று கவுண்டர்!

By Dinesh TGFirst Published May 23, 2023, 5:08 PM IST
Highlights

மக்களிடையே ரூ.2000 நோட்டுகள் அதிகளவு புழக்கம் இல்லாததால், வங்கிகளில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி கவுண்ட்டர்கள் ஆள் இல்லாமல் காத்து வாங்கியது.
 

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது என்றும், இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி (இன்று) முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்தது.

அதன் அடிப்படையில் புதுச்சேரி உள்ள அனைத்து வங்கிகளிலும் 2000 ரூபாய் மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டு, அதற்கென தனி கவுண்டர்களும் அமைக்கப்பட்டிருந்தது.



புதுவை, ஸ்ப்ரேன் வீதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் தனி கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் நாள் என்பதால் 2000 ரூபாய் மாற்றுபவர்கள் ஒரு சிலரே வந்ததாகவும், தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ள நிலையில் யாரும் பெரிய அளவில் பணம் கொண்டு வர வில்லை என்றும் வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

நகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள கவுண்டர்கள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் அதிகளவு வரவில்லை என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

click me!