ஒ.பி.எஸ் உங்களுக்கு ஹீரோ... எங்களுக்கு ஜீரோ... - டிடிவி ஆவேசம்...

Asianet News Tamil  
Published : Mar 09, 2017, 04:01 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
ஒ.பி.எஸ் உங்களுக்கு ஹீரோ... எங்களுக்கு ஜீரோ... - டிடிவி ஆவேசம்...

சுருக்கம்

ops is a zero. ttv dinakaran

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இதையடுத்து ஒ.பி.எஸ் அணி, சசிகலா அணி, தீபா அணி, திமுக சார்பில் ஸ்டாலின் அணி என தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒ.பி.எஸ் அணியில் தீபாவுடன் கைகோர்த்து செயல்படுவதா இல்லை தனித்து போட்டியிடுவதா என ஆலோசித்து வருகின்றனர். சசிகலா தரப்பில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

திமுக சார்பில் எப்படியாவது ஆர்.கே நகர் தொகுதியில் திமுக கோடியை நட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நிச்சயமாக ஆர்.கே.நகர் தொகுதியில் தனித்து போட்டியிடுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் அவர் ஒ.பி.எஸ்சுடன் கைகோர்ப்பார் என்பது சந்தேகமே.

இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி யாரை தீர்மானிக்கிறதோ அவர்கள் தேர்தலில் நிற்பார்கள்.

நாங்கள் அனைவரும் கட்சிக்காக பணியாற்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவோம்.

ஒ.பி.எஸ் என்ற ஒரு அணியே கிடையாது. மீடியாக்கள் தான் அவரை பெரிது படுத்துகின்றனர்.

எங்கள் எதிரி திமுக தான். பன்னீர்செல்வத்தை நீங்கள் ஹீரோவாக வெளிபடுத்துகிறீர்கள் ஆனால் அவர் எங்களை பொருத்தவரை ஜீரோதான்.

ஒ.பி.எஸ் திமுக நூலில் ஆடும் ஒரு பொம்மை, அவ்வளவுதான்.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவால் சிறப்பாக செயல்பட்டது. தற்போது இன்னும் சிறப்பாக செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?
ADMK: அதிமுக பொதுச்செயலாளராக திருஷ்டி பரிகாரம்.! கட்சியை பிடிக்க ஹோமத்தில் இறங்கிய வேலுமணி அணி.!