உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி... வீடு வீடாக சென்று பாஜகவினர் புதிய யுக்தி..!

By Thiraviaraj RMFirst Published Mar 15, 2021, 12:18 PM IST
Highlights


புதுச்சேரி தேர்தல் களம் முன்பு எப்போதும் இல்லத் வகையில் சூடுபிடித்துள்ளது. காரணம் அங்கு பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் பா.ஜ.க., தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரி தேர்தல் களம் முன்பு எப்போதும் இல்லத் வகையில் சூடுபிடித்துள்ளது. காரணம் அங்கு பாஜக மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியில் பா.ஜ.க., தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் 'பெஸ்ட் புதுச்சேரி 'என்ற கோஷம் எழுப்பினார். புதுச்சேரியை கல்வி, வியாபாரம், ஆன்மீகம், சுற்றுலாவில் மிகச்சிறந்த மாநிலமாக மாற்ற பா.ஜ.க,முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியின் மும்மரம் காட்டப்படுகிறது. உங்கள் தேவையே எங்கள் வாக்குறுதி என்ற கோஷத்துடன் மக்களை சந்தித்து, மக்களின் கருத்துகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு தொகுயிலும் பா.ஜ.க,வினர் தேர்தல் வாக்குறுதி கருத்து கேட்பு பெட்டியுடன் சென்று வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினர் கருத்துகளையும் சேகரித்து வருகின்றனர். முதலியார்பேட்டை தொகுதியில் தொகுதி பா.ஜ., தலைவர் பிரகாஷ் தலைமையில் வீடு வீடாக சென்று கருத்துகளை கேட்டறிந்தனர். முதலியார்பேட்டையில் ஆலை தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக உள்ளதால் தொழிலாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

ஏ.எப்.டி., பாரதி, சுதேசி பஞ்சாலைகள், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து வேலை வழங்கினால் மாநில பொருளாதார வளர்ச்சி மேம்படும் என தொழிலாளர்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கடந்த மூன்று ஆண்டு களுக்கும் மேலாக பாசிக் உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என் கருத்து களை பொதுமக்கள் பதிவு செய்தனர். பாஜகவின் இந்த யுக்திக்கு மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
 

click me!