வங்கி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.. 15 லட்சம் ஊழியர்கள் பங்கேற்பு.. பணபரிவர்த்தனை பாதிப்பு..

By Ezhilarasan BabuFirst Published Mar 15, 2021, 12:14 PM IST
Highlights

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து 15 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து 15 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இன்றும், நாளையும் போராட்டம் நடைபெற உள்ளதால், வங்கி வைப்புத் தொகை, பணப்பரிமாற்றம், வங்கிக் கடன் ஒப்புதல் உள்ளிட்ட பங்வேறு வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இரண்டு பொதுத்துறை வங்கிகளும் ஒரு காப்பீட்டு நிறுவனமும் கூடிய விரைவில் தனியார் மயமாக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பினை எதிர்த்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளையும் சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகளின் கூட்டமைப்பான அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக  15 மற்றும் 16ஆம் தேதிகளில் ( இன்றும், நாளையும்)  வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் வாங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் வங்கி பணப்பரிவர்த்தனை, வங்கி வைப்புத் தொகை திரும்ப பெறுதல், வங்கிக் கடன் ஒப்புதல் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர். இந்த வேலை நிறுத்தம் வங்கி ஊழியர்களுக்கு மட்டும் சார்ந்தது அல்ல  பொதுமக்களுக்கும்  வாடிக்கையாளர்களுக்கும் இதனால் பாதிப்பு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு இருக்கிறது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கி விட்டால்  நாட்டினுடைய வருங்காலமே ஒரு கேள்விக்குறியாகிவிடும், ஆகையால் எங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களும், அனைத்து கிராம பொதுமக்கள் அனைவரும், இந்த போராட்டத்திற்கு, வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு தரவேண்டும், மத்திய அரசாங்கத்தின் இந்த முடிவை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். 

இந்த வங்கி வேலை நிறுத்த போராட்டம், பொதுமக்களுக்கு மிகப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி மற்றும் இன்டஸ் இன்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் செயல்படும் என்றாலும், மொத்த வங்கிச் சேவையில் நான்கில் மூன்று பங்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பட்ஜெட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,  பாங்க் ஆப் மகாராஷ்டிரா சென்ட்ரல் வங்கி மற்றும் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் பெயர்கள் அதில் அடிபட்டன. ஆனால் குறிப்பாக எந்த வங்கி இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது என்பது குறித்து அரசாங்கம் தெளிவாக கூறவில்லை. 

 

click me!