திமுக செய்த அராஜகம் கொஞ்சநஞ்சமில்லை.. மீண்டும் அதிமுக ஆட்சிதான்.. அடித்துக் கூறும் அமைச்சர்.

Published : Mar 15, 2021, 11:41 AM IST
திமுக செய்த அராஜகம் கொஞ்சநஞ்சமில்லை.. மீண்டும் அதிமுக ஆட்சிதான்.. அடித்துக் கூறும் அமைச்சர்.

சுருக்கம்

மக்கள் அதிமுகவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள், ஸ்டாலின் மிகப்பெரிய ஒரு கனவு கோட்டைக்குள் வாழ்ந்துவருகிறார். உண்மை நிலவரத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக செய்த ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, அராஜகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தினந்தோறும் ஸ்டாலின் கழக கூட்டணிதோல்வியடையும் என கூறுவது அவருடைய மனக்கணக்கு தானே தவிர மக்களின் கணக்கு அல்ல, நிச்சயம் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என அமைச்சர் மா.பா பாண்டியராஜன் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம்  ஆவடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மா.பா பாண்டியராஜன் பிரச்சாரம் மேற்கொண்டார். 

பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூறியதை போல, நூறு ஆண்டுகளானாலும் அதிமுக மக்கள் பணி செய்யும். புரட்சித்தலைவி அம்மாவின் கருத்துக்கு மாறாக செயல்படுபவர்களை  மக்கள் நிராகரிப்பார்கள். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி பாமக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுக ஆட்சியின்போது அக்காட்சி செய்த ரவுடியிசம், அராஜகம், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை மக்கள் இன்னும் மறக்கவில்லை. 

ஆனால் தினந்தோறும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக கூட்டணி தோல்வியடையும் என கூறுகிறார். அது அவரது மனக்கணக்கு தானே தவிர மக்களின் கணக்கு அல்ல. அதிமுக செய்த சாதனையை கூறி இந்த தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.  மக்கள் அதிமுகவுக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள், ஸ்டாலின் மிகப்பெரிய ஒரு கனவு கோட்டைக்குள் வாழ்ந்துவருகிறார். உண்மை நிலவரத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!