திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அந்தோணி வினோத்குமார் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.
திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அந்தோணி வினோத்குமார் தம்மை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தார்.
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றியுள்ள திமுக கூட்டணி மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேபோல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும் திமுக கூட்டணி வென்றிருக்கிறது. அந்தவகையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது.
undefined
இதனிடையே திமுக சார்பில் போட்டியிட்டவர்களும், சுயேட்சைகளும் சில வரலாற்று வெற்றிகளை பதிவு செய்து அசத்தியுள்ளனர். அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் 27 வயதேயான, பி.எச்.டி. பட்டதாரி அந்தோணி வினோத்குமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக உள்ளிட்ட 8 எட்டு வேட்பாளர்கள் களமிறங்கினர். முதல் தேர்தலிலேயே தீவிர பரப்புரைகளை மேற்கொண்ட திமுக வேட்பாளருக்கு அதற்கான பலன் கிடைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக வேட்பாளரான அந்தோணி வினோத்குமார் 1,976 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டுளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் 2 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்ப்பாளர் தியாகராஜன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.