என்னை எப்போது வேண்டுமானாலும் கைது செய்யுங்கள்.. இன்னும் ஏன் எச்.ராஜாவை கைது செய்யவில்லை. சீமான் ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 4:56 PM IST
Highlights

முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வென்று இருக்கிறது என்றும், படு தோல்வி அடையவில்லை என்றும் அவர் கூறினார். 

தான் சட்ட விரோதமாக செயல்பட்டால் தம்மை தாராளமாக காவல் துறை கைது செய்யலாம் என்றும் இன்னும் ஏன் எச். ராஜா வை தமிழக போலீஸ் கைது செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி பட்டினி போராட்டம் நடத்தி உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கே.கே நகரில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்தேசிய இயக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது, தமிழ் தேசியம் பேசும் நமக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து திரிபுரா, நாகலாந்து, மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலத்திலிருந்து வந்துள்ளனர். 

முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வென்று இருக்கிறது என்றும், படு தோல்வி அடையவில்லை என்றும் அவர் கூறினார். இப்போது இல்லை என்றாலும் எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சி பிரம்மாண்டமாக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சியினுடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்றும், நாம் தமிழர் கட்சி பலமாக இருப்பதனால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களை எதிர்ப்பதாக அவர் கூறினார். திமுகவும், அதிமுகவும் முதலில் தனித்து போட்டியிட்டு தங்களுக்குள்ள செல்வாக்கை தனிப்பட்ட முறையில் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதுவரை ஆட்சிக்கு வராத நாம் தமிழர் கட்சியை ஆட்சியில்  இருந்த கட்சிகள் பொறாமையின் அடிப்படையில் வசை பாடுவதாக சீமான் கூறினார்.

இதையும் படியுங்கள்:  மோடிக்கு எதிராக மாநில முதல்வர்களை அணி திரட்டும் ஸ்டாலின்..தெலங்கானாவுக்கு தூது சென்ற திமுக முக்கிய எம்.பி.

இதையும் படியுங்கள்: ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுகவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்துள்ளது. மார்த்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய வேண்டும் என புகார்கள் எழுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், முதலில் எது பயங்கரவாதம் என்பதை வரையறுத்து விட்டு பின்னர் நான் சட்ட விரோதமாக செயல்பட்டால் என்னை தாராளமாக கைது செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார், சாட்டை துரைமுருகன் அடிக்கடி சாட்டையை வீசுவதால் பலருக்கு அது வலிக்கிறது என்றும், அதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறிய சீமான்,  சட்டம் ஒழுங்கை மீறுபவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும் என்று கூறியதடுன், ஏன் இதுவரை எச்.ராஜாவை கைது செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பது குறித்து பதில் அளித்த அவர், அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கு தான் அதற்கு காரணம் என்றார்.
 

click me!