மாஸ் காட்டிய ஸ்டாலின் அரசு.. போதும் போதும் என்ற அளவுக்கு பாராட்டி தள்ளிய ராமதாஸ்..!

Published : Oct 13, 2021, 02:57 PM IST
மாஸ் காட்டிய ஸ்டாலின் அரசு.. போதும் போதும் என்ற அளவுக்கு பாராட்டி தள்ளிய ராமதாஸ்..!

சுருக்கம்

தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும்.

17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும் என கூறி தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் 31,000-ஐ கடந்து சென்றது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என நோயாளிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதனையடுத்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. 

இதனால், கொரோனா பாதிப்பு பெரமளவு குறைக்கப்பட்டு பொது போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும், கொரோனாவை தடுக்கும் பேராயுதமான தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா 2,000-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திய  தமிழக அரசுக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1300க்கும் கீழாக 1289 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. சென்னையில் 164 ஆக குறைந்திருக்கிறது. தொடர்ந்து 17-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது நிச்சயமாக நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

தமிழக அரசும், மருத்துவத் துறையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதிக அளவில் போடப்பட்ட தடுப்பூசிகள் தான் இதற்கு காரணம். முகக்கவசம் அணிந்து இதற்கு ஒத்துழைத்த மக்களும் இதற்கு காரணம். இவர்கள் பாராட்டத்தக்கவர்கள். அனைவரின் பணியும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!