மோடிக்கு எதிராக மாநில முதல்வர்களை அணி திரட்டும் ஸ்டாலின்..தெலங்கானாவுக்கு தூது சென்ற திமுக முக்கிய எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 2:43 PM IST
Highlights

அந்த வரிசையில் திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., அவர்கள்  கடந்த 6.10.2021 அன்று மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் - 11.10.2021 அன்று மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அவர்களையும், நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தை அளித்தார். 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் வழங்கி ஆதரவு கோரினார். நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்றும், அது கிராம்புற ஏழை எளிய மக்களுக்கு எதிரானது என்றும், தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அதற்கான குரல் தீவிரமடைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கையாக தயாரித்து அது மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்: ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுகவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்துள்ளது. மார்த்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்நிலையில், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது எனவும், அதனை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநில முதலமைச்சர்களுக்கு கடந்த 4ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்-2021 என்ற சட்ட முன்வடிவு உள்ளிட்ட நீட் ரத்து குறித்து தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும், நீட் தேர்வு குறித்தும், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் நகல் ஆகியவற்றை, மொழிபெயர்த்து பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று வழங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர். 

அந்த வரிசையில் திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., அவர்கள்  கடந்த 6.10.2021 அன்று மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களையும் - 11.10.2021 அன்று மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அவர்களையும், நேரில் சந்தித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தை அளித்தார்.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. அடித்து ஊற்றபோகுதாம்.

இந்நிலையில் இன்று (13.10.2021), காலை, தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மாண்புமிகு தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் அவர்களின் மகனும் - மாநில தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவ் அவர்களை நேரில் சந்தித்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தையும் -  “நீட்” தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார். அதுபோது, கழக மருத்துவ அணி இணைச் செயலாளரும் - வடசென்னை தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கலாநிதி வீராசாமி உடனிருந்தார்.

click me!