மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேரின் தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய வழக்கு.. நீதி மன்றம் எடுத்த அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Oct 13, 2021, 2:18 PM IST
Highlights

இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன்  ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்ய கோரிய விசாரணை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்ததுள்ளது. கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை, என்று 20க்கும் மேற்பட்ட வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில்  அபிராமபுரம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு நிலத்தை சுப்பையாவும், பொன்னுச்சாமியும் உரிமை கோரி வந்த நிலையில் அந்த நிலம் டாக்டர் சுப்பையாவுக்கு சாதகமாக கீழ் நீதிமன்றத்தில் தீர்ப்பாகியுள்ளது.இந்த நிலப் பிரச்சினை தொடர்பாக இருந்து வந்த முன்பகை காரணமாக டாக்டர் சுப்பையா படுகொலை செய்யப்பட்டதும். இதற்கு அரசு பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், வழக்கறிஞரான மகன் பாசில், என்ஜினீயரான மகன் போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐய்யப்பன்  ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ருவர் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்:  ஆட்சிக்கு வந்து 5 மாதங்களில் திமுகவின் செல்வாக்கு மளமளவென உயர்ந்துள்ளது. மார்த்தட்டும் முதலமைச்சர் ஸ்டாலின்.

கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 173 ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டது. எதிரிகள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கபட்டனர். 7 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது. சாட்சி விசாரணை மற்றும் இறுதி வாதங்கள் அனைத்தும் ஜூலை 28 ம் தேதி முடிவடைந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி அளித்த தீர்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐய்யப்பன் தவிர மற்ற 9 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் பொன்னுசாமி, அவரின் மகன்களான வழக்கறிஞர் பாசில், என்ஜினீயரான போரிஸ் மற்றும் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், என்ஜினீயர் முருகன், செல்வபிரகாஷ் ஆகிய ஏழு பேருக்கு கொலை மற்றும் கூட்டுசதி பிரிவுகளில் இரட்டை தூக்கு தண்டனையும், தலா50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். 

இதையும் படியுங்கள்: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை.. அடுத்த 4 நாட்களுக்கு இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. அடித்து ஊற்றபோகுதாம்.

இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாகவும் இதனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பளித்தார். இந்நிலையில் பொன்னுசாமி, பாசில், போரிஸ், வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்ய கோரி விசாரணை நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு  வழக்கு தொடர்பான விபரங்களை அனுப்பிவைத்தது. இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ், மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

click me!