மிகப்பெரிய அரசியல் பிழையை செய்துட்டீங்க... அதிமுகவினருக்கு எடுத்து சொன்ன கி.வீரமணி..!

Published : Aug 05, 2021, 06:28 PM IST
மிகப்பெரிய அரசியல் பிழையை செய்துட்டீங்க... அதிமுகவினருக்கு எடுத்து சொன்ன கி.வீரமணி..!

சுருக்கம்

கருணாநிதி படத்திறப்புவிழாவில் கலந்து அதிமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சி தலைமை தெரிவித்தது. அதேபோல் அக்கட்சியினர் கலந்து கொள்ளாமல் விழாவினை புறக்கணித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவும், கருணாநிதி படத்திறப்பு விழாவும் நடந்துள்ளது. இந்த வரலாற்றுப் பெருமை வாய்ந்த விழாவில் முக்கிய எதிர்க்கட்சியாகிய அ.தி.மு.க. புறக்கணித்தது மிகப்பெரிய அரசியல் பிழை மட்டுமல்ல, ஜனநாயக வரலாற்றில் அக்கட்சி தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்ட ஒரு அழிபட முடியாத கறையுமாகும்.

100 நாள்கள் கூட ஆகாத ஓர் ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று போராட்டம் நடத்துவது எவ்வளவு விசித்திரம். எதிர்க்கட்சியாக செயல்படுங்கள் - எதிரிக்கட்சியாக செயல்படுவது ஜனநாயகம் ஆகாது. கண்ணாடி வீட்டிலிருந்து கற்கோட்டையான தி.மு.க. ஆட்சியை நோக்கி இப்படி கல்லெறிவதால் ஏற்படும் இழுக்கு எதிர்க்கட்சி அ.தி.மு.க.வுக்குத்தான்’’எனத் தெரிவித்துள்ளார். 

கருணாநிதி படத்திறப்புவிழாவில் கலந்து அதிமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள் என அக்கட்சி தலைமை தெரிவித்தது. அதேபோல் அக்கட்சியினர் கலந்து கொள்ளாமல் விழாவினை புறக்கணித்தனர்.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!