Maharashtra : ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சிவசேனா ஆட்சி கவிழ்ப்பு
மகாராஷ்டிராவில் 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றிப்பெற்றது. தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அதிகாரத்தை இருகட்சிகளுக்கும் அளிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்ததாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இதற்கு பாஜக தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. முதல்வர் பதவிக்காக இரு கட்சிகளும் 30 ஆண்டுகால கூட்டணியை முறித்துக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தார். இந்த நிலையில் சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக உடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா கவர்னரிடம் நேற்று ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
மேலும் செய்திகளுக்கு.. கோவை மேயர் வீட்டை அழகுபடுத்த ரூ 1 கோடியா..? அதிமுக கவுன்சிலரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
நடிகர் பிரகாஷ் ராஜ்
இதனை ஏற்ற கவர்னர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் இந்திய அரசியலில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதில், 'நீங்கள் ஒரு பெரிய வேலை செய்தீர்கள். மகாராஷ்டிராவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை புரிந்துகொண்டு மக்கள் உங்களுடன் நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். சாணக்கியர்கள் இன்று லட்டு சாப்பிடலாம். ஆனால் உங்கள் தூய்மை என்றென்றும் இருக்கும்’ என பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.. டுவிட்டர் பக்கத்தில் தனது அதிமுக பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி.. !
உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு
மேலும், நடிகை ஊர்மிளா மடோன்கரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக முன்வந்தார். கோவிட் காலத்தில் உத்தவின் தலைமைப் பண்புகளைப் பாராட்டி அவர் ட்வீட் செய்துள்ளார். ஒரு தலைவராக உங்கள் பணி மகாராஷ்டிராவை வகுப்புவாத வெறுப்பு மற்றும் மதவெறியிலிருந்து விலக்கி வைத்துள்ளது. உங்கள் தலைமை முன்மாதிரி, பாரபட்சமற்ற, தைரியமான, பொறுப்பான, வெளிப்படையான நிர்வாகம் என்று ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!