ஸ்டாலின் எப்போ ராஜினாமா செய்வாரோ.. உத்தவ் தாக்கரே கதி எப்ப வருமோ.? வயிற்றெரிச்சலில் இந்து முன்னணி.

By Ezhilarasan BabuFirst Published Jul 1, 2022, 6:28 PM IST
Highlights

மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் எப்போது ராஜினாமா செய்வாரோ தெரியவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவைப் போல தமிழ்நாட்டிலும் முதல்வர் ஸ்டாலின் எப்போது ராஜினாமா செய்வாரோ தெரியவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்  ஆன்மிக ஆட்சி நடைபெறுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகிறார் ஆனால் இந்துக்களுக்கு எதிரான ஆட்சிதான் இங்கு நடந்து கொண்டு இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து வருகின்றன. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையையும் இந்து இயக்கங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன, திமுக இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்றும் பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில்  இந்து முன்னணி கட்சியின் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து உரிமை மீட்பு பிரச்சார பயணம் தொடங்கியது. அந்த வகையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதையும் படியுங்கள்:  அமித்ஷா இது தேவையா..? என் பேச்சை கேட்டிருந்தால்.. மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம்.. குமுறும் உத்தவ்.

அதில் அக்கட்சியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக செயல்கள் நடந்து வருகிறது, இந்துக்களின் உரிமைகள் மீட்க்கப்படவேண்டும், இந்துக்களுக்கான உரிமைகளை தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மகாராஷ்டிராவில் உத்தவ்  தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதுபோல தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை என அவர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள்: பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

ஏற்கனவே பல எம்எல்ஏக்கள் இடம் பேரம் நடப்பதாக தகவல்கள் வருகிறது, அதுவும் மத்திய உளவுத்துறை மூலமாக தகவல் வெளியாகி வருகிறது அது விரைவில் நடந்தால் நல்லது, இப்போது இந்துக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள், எதிர்வரும் நாடாளுமன்றம் தேர்தலாக இருந்தாலும் சரி, அல்லது 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, இந்துக்கள் யாருக்கு ஆதரவு தருகிறார்களோஅவர்களுக்கு நல்ல காலம் என்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி நடைபெறுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறிவருகிறார், ஆனால் தமிழகத்தில் நடப்பது இந்துக்களுக்கு எதிரான ஆட்சி. நேற்று கூட வள்ளியூரில் கோவிலுக்கு சென்றிருந்தேன், அங்கு கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. தமிழகத்தில் கோவில் பணத்தை வைத்து ஊழல் நடக்கிறது, தங்கத்தை உருக்கி அதில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது, இதையெல்லாம் தடுத்து நிறுத்த இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!