அகிலேஷ் கோட்டையில் வெடி வைத்த யோகி.. மதுராவை கையில் எடுத்து அதகளம்.. உடைக்கும் கோலாகல சினிவாசன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 18, 2022, 5:20 PM IST
Highlights

அதேபோல  யாதவர்கள் அகிலேஷ் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள், இந்த நிலையில்தான் யாதவர்களை பாஜக இப்போது குறி வைத்திருக்கிறது. யாதவர்களின் குல சாமி பகவான் கிருஷ்ணன், எனவே கிருஷ்ணரை கையில் எடுப்பதன் மூலமாக அகிலேஷ் யாதவின் traditional vote bank ஆன யாதவர்களின் வாக்கு வங்கியில் ஒரு பிளவை உண்டு பண்ண முடியும் என பாஜக திட்டமிட்டுள்ளது.

மதுராவில் கிருஷ்ணர் கோவில் கட்டப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்த ஒற்றை அறிவிப்பால் உத்திரபிரதேச மாநிலத்தின் தேர்தல் களம் அடியோடு பாஜகவுக்கு சாதகமாக மாறி இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் கூறியுள்ளார். அதனால் தான் சமீபமாக வரும் கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் யோகி ஆதித்யநாத் அதிக தொகுதிகளை கைப்பற்றி வெற்றிபெறுவார் என தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

உத்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 80 லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதியில் இருந்து மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றே உத்தரப் பிரதேசத்தை ஆளப்போவது யோகி ஆதித்யநாத்தா அல்லது அகிலேஷ் யாதவா என்பது தெரியவரும்.

மிகவும் பரபரப்பான கட்டத்தை நோக்கி உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. பம்பரமாக சுழன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆதித்யநாத் போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அகிலேஷ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். யோகியை வீழ்த்த விதவிதமான உத்திகளையும் அவர் கையாண்டு வருகிறார். இவர்களை தவிர களத்தில் பகுஜன் சமாஜ் மாயாவதி மற்றும் காங்கிரஸ் பிரியங்கா காந்தி ஆகியோரும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதமாகவே  இருந்து வருகிறது. குறிப்பாக யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் ஒவ்வொரு வியூகமும் மக்களை கவரும் வகையில் உள்ளது. அகிலேஸ் யாதவின் வாக்கு வங்கியை சரிக்க யோகி எடுத்துள்ள உத்தி வலுவானது என மூத்த பத்திரிக்கையாளர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு :- 

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி அமாரா என்ற இடத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், விரைவில் மதுரா கோயில் கட்டப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை மதுராவின் கோயில் கட்டுவோம் என்பதை அவர் வெளிப்படையாக இதுவரை  பேசியது இல்லை, ஆனால் இப்போது பேசி இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொன்னோம் இப்போது கட்டப்பட்டு வருகிறது. காசியில் விஸ்வநாதர் ஆலயம் அமைப்போம் என்று சொன்னோம் இன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவும் செய்த நாங்கள் மதுராவில் கோயில் கட்ட மாட்டோமா என கூறியுள்ளார். அவுரங்கசீப் காலத்தில் மதுரை கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளது. அந்த மசூதியைக் கட்டி முடிப்பதற்குள் அவுரங்கசீப் இறந்து விட்டார், அதனால் இப்போது கோவிலும் மசூதியும் ஒரே இடத்தில் இருக்கிறது.

கிருஷ்ணர் பிறந்ததாக சொல்லப்படும் மதுரா சிறைக்குள் அதாவது கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொல்ல வேண்டும் என்றால் அந்த மசூதிக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டும், இதுதான் தற்போது அங்குள்ள நிலை, எனவே அந்த கிருஷ்ணர் பிறந்த இடத்தில் விரைவில் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனால்தான் பாஜக மதுராவை இப்போது கையில் எடுத்திருக்கிறது இது பாஜகவின் முக்கியமான அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இது எப்படி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்து என்றால், அகிலேஷ் யாதவுக்கு யானை பலமாக இருப்பது இஸ்லாமியர்களின் வாக்கும், யாதவர்களின் வாக்கும்தான். யாதவர்கள் 13 சதவீதம் பேர் உள்ளனர், இஸ்லாமியர்கள் 19.5 சதவீதம் பேர் உள்ளனர். இஸ்லாமியர்கள் வாக்கு என்பது சிந்தாமல் சிதறாமல் அகிலேஷ்க்கு விழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பே இல்லை, ஒரு வேலை ஓவைசி நிற்பதால் கொஞ்சம் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறது தவறி மற்றபடி பிரியாது.

அதேபோல  யாதவர்கள் அகிலேஷ் வாக்கு வங்கியாக இருக்கிறார்கள், இந்த நிலையில்தான் யாதவர்களை பாஜக இப்போது குறி வைத்திருக்கிறது. யாதவர்களின் குல சாமி பகவான் கிருஷ்ணன், எனவே கிருஷ்ணரை கையில் எடுப்பதன் மூலமாக அகிலேஷ் யாதவின் traditional vote bank ஆன யாதவர்களின் வாக்கு வங்கியில் ஒரு பிளவை உண்டு பண்ண முடியும் என பாஜக திட்டமிட்டுள்ளது. ஆக அகிலேஷ் யாதவ் வாக்கு வங்கியில் ஒரு சரிவை ஏற்படுத்தினால் போதும், அதிக வாக்கு வித்தியாசத்தில், அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுவிட முடியும் என பாஜக வியூகம் வகுத்துள்ளது. அதனால் மதுராவை பாஜக கையில் எடுத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!