மீண்டும் முதல்வராக வெற்றிவாகை சூடுகிறார் யோகி.. 70 சதவீத பெண்கள் ஆதரவு.. அடித்துச் சொல்லும் கருத்து கணிப்பு.

Published : Feb 08, 2022, 05:21 PM IST
மீண்டும் முதல்வராக வெற்றிவாகை சூடுகிறார் யோகி.. 70 சதவீத பெண்கள் ஆதரவு..  அடித்துச் சொல்லும் கருத்து கணிப்பு.

சுருக்கம்

இந்நிலையில்தான், வாக்குப்பதிவுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா நியூஸ்  ஜான் கி பாத் என்ற நிறுவனம் நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 228 முதல் 254 இடங்களை கைப்பற்றும் என்றும்,  41.3  சதவீதம் முதல் 43.5  சதவீதம் வரை வாக்குகளைப் பெறலாம்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத்  முதல்வராவது உறுதி என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியா நியூஸ் ஜன்கி பாத் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரியவந்துள்ளது. குறைந்தது 228 முதல் 254 இடங்களை பாஜக கைப்பற்றும் வேண்டும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. 

உத்திரப் பிரதேசம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 80 லோக்சபா தொகுதிகளை கொண்டுள்ளது. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதியில் இருந்து மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றே உத்தரப் பிரதேசத்தை ஆளப்போவது யோகி ஆதித்யநாத்தா அல்லது அகிலேஷ் யாதவா என்பது தெரியவரும்.

மிகவும் பரபரப்பான கட்டத்தை நோக்கி உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. பம்பரமாக சுழன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆதித்யநாத் போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அகிலேஷ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். யோகியை வீழ்த்த விதவிதமான உத்திகளையும் அவர் கையாண்டு வருகிறார். இவர்களை தவிர களத்தில் பகுஜன் சமாஜ் மாயாவதி மற்றும் காங்கிரஸ் பிரியங்கா காந்தி ஆகியோரும் உள்ளனர். 

இங்கு மொத்தம்  403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் ஒரு கட்சி 202 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை பிடிக்க முடியும், தற்போதைய அங்கு அறிவிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை1,74 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. கிட்டத்தட்ட 15 கோடி மக்கள் வாக்காளர்களாக உள்ளனர். அடிப்படையாக நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்று கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாஜக,  அப்னோதல்,  நிஷாந்த் பார்ட்டி, நிஷாந்த் என்பது படகு ஓட்டுபவர்களின் சமூகத்திற்கான கட்சி ஆகும். இந்த 3 கட்சிகளும் ஒருபுறம் உள்ளன  மற்றொரு புறம் சமாஜ்வாடி தலைமையில் 6 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மாயாவதி தனியாக போட்டியிடுகிறார், காங்கிரஸ் தனியாக களம் காண்கிறது, மாயாவதி மற்றும் காங்கிரசுடன் எவரும் கூட்டுச் சேர முன்வராததால் அக்கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதேபோல சிவசேனா 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது, ஓவைசி 100 தொகுதிகளில் போட்டியிடுகிறார், மாயாவதியின் திரிணாமுல் காங்கிரஸ் 403 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது. இதுதான் அங்கு தேர்தல்களமாக உள்ளது. 

கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது:- அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தலைப் பொறுத்தவரையில் முதல் கருத்து கணிப்பு கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி வெளியானது. ஏபிபி சி ஓட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வெளியானது, அதில் யோகி ஆதித்யநாத் கிட்டத்தட்ட 280 தொகுதிகள் முதல் 290 தொகுதிகள் வரை கைப்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேபோல் சமீபத்திய கருத்துக் கணிப்பு இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி டைம்ஸ் நவ் வெளியிட்டது, அதில் 250 தொகுதிகள் வரை பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. எனவே இதில் நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் 202 தொகுதிகளை கைப்பற்றினால் ஒரு கட்சி ஆட்சியைக் கைப்பற்ற முடியும், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 312  சீட் ஆகும், எனவே கடந்த ஆண்டு மார்ச் 18 இல்  வெளிவந்த கருத்து கணிப்பில் முதல் சமீபத்தில் ஜனவரி 1ஆம் தேதி வந்த கருத்துக்கணிப்பு வரையில் மொத்தம் 6 கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த 6 கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றுதான் சொல்லியிருக்கின்றன. 

இந்நிலையில்தான், வாக்குப்பதிவுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா நியூஸ்  ஜான் கி பாத் என்ற நிறுவனம் நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக 228 முதல் 254 இடங்களை கைப்பற்றும் என்றும்,  41.3  சதவீதம் முதல் 43.5  சதவீதம் வரை வாக்குகளைப் பெறலாம்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சமாஜ்வாடி கட்சி கூட்டணி இதுவரை கணிக்கப்பட்ட அதிகபட்ச வாக்குப் பங்காக 35.5% முதல் 38% வாக்குகளை பெறலாம் என இந்திய நியூஸ் - ஜன் கி பாத் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் ஒற்றை இலக்க எண்களில் இடங்களை கைப்பற்ற கூடும் என இந்த கர்த்து கணிப்பு அதிர்ச்சி தெரிவித்துள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தில் 2017 ஐ விட பாஜக குறைவான இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் அங்கு சமாஜ்வாடி கட்சியை விட அதிக இடங்களைப் பாஜக பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காவி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என அம்மாநிலத்தில் 70% பெண்கள் விரும்புவதாகவும், அவர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!