நீட் கொண்டு வந்தது அதிமுகவா..? காங்கிரஸ் கட்சியை வெளுத்த எடப்பாடி பழனிசாமி !!

Published : Feb 08, 2022, 02:21 PM IST
நீட் கொண்டு வந்தது அதிமுகவா..? காங்கிரஸ் கட்சியை வெளுத்த எடப்பாடி பழனிசாமி !!

சுருக்கம்

நீட் தேர்வை முதன்முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் என்று காங்கிரசை வெளுத்து வாங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். 

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘நீட் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இதை அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியபோல் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. எங்கள் மீது அவதூறு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். நீட் எப்போது வந்தது என்ற உண்மையைத்தான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நீட் ரத்து செய்வதற்காக உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அணுகுவதை, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து செய்ய வேண்டும். நீட் தேர்வு ரத்து குறித்து அதிமுக ஆலோசனைகளை கூறுகிறது. இதற்கு  உள்நோக்கம் கற்பிக்காதீர்கள்.நடந்த உண்மையை தான் கூறினார். உண்மையை யாராலும் மறைக்க முடியாது. படித்த அனைவருக்கும் இந்த சட்டம் எப்போது வந்தது என்று தெரியும். வரலாற்றை மறைக்க முடியாது’ என்று பேசினார்.

கூட்டம் முடிந்த பிறகு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘முதல்வர் உட்பட திமுகவினர் வெளியே பேசும்போது நீட் தேர்விற்கு காரணம் அதிமுக தான், என எங்கள் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். நீதிமன்றம் ரத்து செய்த நீட் தேர்வை மீண்டும் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். அதிமுக தரப்பு கருத்துக்களை முழுமையாக தெரிவிக்க அனுமதிக்கவில்லை. அதேபோல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை பேசவும் அனுமதிக்கவில்லை’ என்று பேசினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!