
உத்தரப்பிரதேச முதல் அமைச்சராக யோகி ஆதித்யாநாத் நேற்று பதவியேற்ற நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் பிரசாரம் தொடங்கி தற்போது வரை பா.ஜ.க.வை தொடர்ந்து விமர்சித்து வருபவர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. ஆர்.எஸ்.எஸ். கொள்கையை செயல்படுத்தவே எம்.எல்.ஏ.வே.இல்லாத யோகி ஆதித்யநாத்தை அக்கட்சி முதல் அமைச்சராக நியமித்திருப்பதாகவும் கடுமையாகச் சாடி வருகிறார்.
பா.ஜ.க. மீதான மாயாவதியின் விமர்சனமும், அதனைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகி சுட்டுக் கொல்லப்பட்டதும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி பார்க்கக் கூடியதாகவே உள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.