பொது மக்கள் கலந்துரையாடல்  நிகழ்ச்சி…பங்கேற்காமல் ஜுட் விட்ட எம்எல்ஏக்கள்..

 
Published : Mar 20, 2017, 08:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
பொது மக்கள் கலந்துரையாடல்  நிகழ்ச்சி…பங்கேற்காமல் ஜுட் விட்ட  எம்எல்ஏக்கள்..

சுருக்கம்

coffee with mlas

தேர்தல் நேரத்தில் மட்டும் வேட்பாளர்கள் மக்களை வந்து சந்திப்பதாகவும், வெற்றி பெற்ற பின்பு மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அவர்கள் கேட்பதில்லை என்று கூறி எம்.எல்.ஏக்கள் காபி குடித்து கொண்டே தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சியை அறப்போர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காஃபி வித் எம்.எல்.ஏக்கள் என்ற பெயரில் இந்த உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்த 122 அ.தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பறை ஆட்டத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒரு எம்.எல்.ஏ கூட பங்கேற்கவில்லை.

ஆளும்கட்சி மட்டுமல்லாமல், ஓபிஎஸ் அணியினர், திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சமகால அரசியல் குறித்தும், அரசியல் விழிப்புணர்வு குறித்தும் இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  பேசினர்.  

பாடகர்  டி.எம்.கிருஷ்ணா, பேசும்போது ‘இங்கு வராத எம்.எல்.ஏக்கள் அனைவரும் பொறம்ப்போக்குகள் என்றார்.. பொறம்போக்கு என்பது நல்ல ஒரு வார்த்தை. நாம் அனைவரும் பொறம்போக்குகள்  தான் என்று தெரிவித்த கிருஷ்ணா, மக்களுக்கு எம்எல்ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை உள்ளது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் எம்எல்ஏக்கள் மக்களை நேரடியாக சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து அதற்கான விதையை உருவாக்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றும் அறப்போர் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்