
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியில் போதுமான கட்டமைப்பு இல்லை என்றும் , இதில் பாஜக சிறந்து விளங்குவதாகவும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா கொல்கத்தாவில் நடைபெற்றது,
அப்போத பேசிய ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பு, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டமைப்புக்கு இணையாக இல்லை என்று தெரிவித்தார்.
பா.ஜ.கட்சியும் , ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கட்டமைப்பு ரீதியில் பொது மக்களிடம் சிறப்பான முறையில் பிரசாரம் செய்து, தேர்தல் நேரங்களில் அதிக வாக்குகளை பேற்றுவிடுவதாக சிதம்பரம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும், தமிழகத்தின் ஆளுங்கட்சியான, அதிமுகவையும் ஒப்பிடும்போது பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்., கட்டமைப்பு சிறப்பானதாக இல்லை என்றும் சிதம்பரம் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக என்று அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதாக கூறிய சிதம்பரம், அப்படி பார்த்தால், பஞ்சாபில், பா.ஜ.க.வுக்கு ஏன் தோல்வி கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.