ஜனநாயகத்தில் நேற்று கருப்பு நாள்.. துணியால் வாயை கட்டிக் கொண்டு கதறிய காங்கிரஸ்.

By Ezhilarasan BabuFirst Published May 19, 2022, 12:51 PM IST
Highlights

ஜனநாயகத்திற்கு நேற்று கருப்பு நாள் என்றும் பேரறிவாளன் விடுதலையை யாரும் கொண்டாடவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

ஜனநாயகத்திற்கு நேற்று கருப்பு நாள் என்றும் பேரறிவாளன் விடுதலையை யாரும் கொண்டாடவில்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்காட்சி தொண்டர்கள் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறினார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.  இதை ஒட்டு மொத்த தமிழகமும்  வரவேற்று கொண்டாடி வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரறிவாளனை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் பேரறிவாளன் விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் கருப்பு நாள் என விமர்சித்து வருகின்றனர். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போராட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத்தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி நேற்று காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி விடுத்த அறிக்கையின் அடிப்படையில் இன்று அறப்போராட்டம் நடைபெறுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கா விட்டாலும் அதன் மீது கருத்து சொல்ல இந்திய குடிமக்கள் அனைவருக்கும் உரிமை உண்டு. நேற்று விடுதலை செய்யப்பட்டவர் ஒன்றும் தியாகி அல்ல, அவர் பயங்கரவாதி, கொலைக் குற்றவாளிகளை தமிழர்கள் என்று அடையாளம் காட்டி அவர்களை விடுதலை செய்வது அபத்தமான ஒன்றுதான். இந்த பயங்கரவாதியை கொஞ்சுவதும் கட்டிப்பிடிப்பதும் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் கொந்தளித்துப் போய் உள்ளோம், ஜனநாயகத்திற்கு எதிராக நேற்று கருப்பு நாள், மக்கள் யாரும் இந்த விடுதலையை கொண்டாடவில்லை. இதை ஆதரிக்கும் கழகத்திடம் கேட்கிறேன், உங்கள் குடும்பத்தில் உங்கள் கழகத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா? பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம் என தெரிவித்தனர். 
 

click me!