நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 21, 986 பேர் மீது வழக்கு பதிவு.. கொரோனா மீது கொஞ்சம்கூட பயமில்ல.?

Published : May 05, 2021, 12:29 PM ISTUpdated : May 05, 2021, 12:31 PM IST
நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 21, 986 பேர் மீது வழக்கு பதிவு.. கொரோனா மீது கொஞ்சம்கூட பயமில்ல.?

சுருக்கம்

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 21 ஆயிரத்து 986 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.   

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 21 ஆயிரத்து 986 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது, மே 3ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்துள்ளது. 

எனவே நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மே 6ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொது போக்குவரத்துக்களிலும் 50 இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது. பலசரக்கு கடைகள், மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 21 ஆயிரத்து 986 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 7 லட்சத்து 43 ஆயிரத்து 555 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 550 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 010 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!