சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார்.. மத்திய அரசு மாநில அரசுக்கு உதவ வேண்டும்.. திருநாவுக்கரசர் வேண்டுகோள்.

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 11:57 AM IST
Highlights

சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஸ்டாலின்,  ஆட்சியில் சிறந்த அனுபவம் கொண்டவர், தமிழகத்தின் சிறந்த முதல்வராக வழிநடத்துவார்.  

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சிறந்த முதல்வராக செயல்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக காங்கிரசின் முன்னாள் மாநில தலைவருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் (133 சட்டமன்றத் தொகுதிகள்) திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. 

 

இந்நிலையில் நேற்று மாலை திமுக எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக சட்டமன்ற தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க. ஸ்டாலின் சந்தித்து உரிமை கோரினார். மேலும்  வருகின்ற ஏழாம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சராக ஸ்டாலின், ஆளுநர் மாளிகையில் பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க வந்தோம். 

அறந்தாங்கி தொகுதியில் 31ஆயிரம் வாக்கு வித்யாசத்தில்  ராமசந்திரனை வெற்றி பெற வைத்தற்கு வாழ்த்துக்கள் பெற வந்துள்ளார். சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார். பல்வேறு பொறுப்புகளில் இருந்த ஸ்டாலின்,  ஆட்சியில் சிறந்த அனுபவம் கொண்டவர், தமிழகத்தின் சிறந்த முதல்வராக வழிநடத்துவார். பின் தங்கி உள்ள தமிழகத்தை முன்னேற்றம் அடைய செய்வார். ஊரங்கு காலத்தில் மக்களுக்கு உதவி தொகைகள்  மற்றும் நிவாரண தொகைகள் வழங்குவதில் மத்திய அரசு உதவ வேண்டும். மருத்துவ வசதிகள் கிடைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  

 

click me!