மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நம்பர் 2 யார்? பரபரக்கும் அண்ணா அறிவாலயம்..!

By Selva KathirFirst Published May 5, 2021, 11:29 AM IST
Highlights

கடந்த 2006 முதல் 2011 வரையிலான கலைஞர் அமைச்சரவையில் நம்பர் 2வாக இருந்தவர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆனால் தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனை சபாநாயகர் ஆக்கும் முடிவில் ஸ்டாலின் உள்ளதால் நம்பர் 2 இடத்திற்கு போட்டி உருவாகியுள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான கலைஞர் அமைச்சரவையில் நம்பர் 2வாக இருந்தவர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆனால் தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனை சபாநாயகர் ஆக்கும் முடிவில் ஸ்டாலின் உள்ளதால் நம்பர் 2 இடத்திற்கு போட்டி உருவாகியுள்ளது.

வரும 7ந் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். புரட்டகால்படி சீனியாரிட்டி அல்லது அமைச்சரவையில் முக்கியானவர்கள் என்கிற அடிப்படையில் நம்பர் ஒன், நம்பர் 2 என வரிசையாக அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். அந்த வகையில் கடந்த ஜெயலலிதா அமைச்சரவையில் திண்டுக்கல் சீனிவாசன் நம்பர் 2வாக பதவி ஏற்றார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அமைச்சரவை மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலும் திண்டுக்கல் சீனிவாசன் தான் நம்பர் 2வாக இருந்தார்.

இந்த நிலையில் திமுக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறகு யார் அமைச்சராக பதவி ஏற்பார்கள் என்கிற விவாதம் எழுந்துள்ளது. பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில் துரைமுருகன் இரண்டாவதாக பதவி ஏற்பது என்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த முறை துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி இல்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக கூறுகிறார்கள். சபாநாயகர் பதவிக்கு துரைமுருகன் பெயரை ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் இரண்டாம் இடம் யாருக்கு என்பதாக கேள்வி எழுந்துள்ளது.

திமுக பொருளாளராக உள்ள டி.ஆர்.பாலு சட்டமன்ற உறப்பினர் இல்லை. எனவே அவராலும் அமைச்சராக முடியாது. அப்படி என்றால் 3வது இடத்தில் இருப்பது திமுகவின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தான். எனவே ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு இரண்டாவதாக கே.என்.நேரு பதவி ஏற்கலாம் என்று கூறுகிறார்கள். அவரே ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் நம்பர் 2வாக அமைச்சரவையில் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அமைச்சரவையில் புரட்டகால்படி சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. உதாணரமாக அதிமுக அரசு பதவி ஏற்றால் நம்பர் 2வாக தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருப்பது வழக்கம்.

ஆனால் திமுகவில் அப்படி ஒரு மரபு இல்லை. கட்சியில் சீனியாரிட்டி அடிப்படையில் தான் அமைச்சரவையில் வரிசை ஒதுக்கப்படும். ஆனால் இந்த முறை வன்னியர் அல்லது கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு கட்சிக்குள் எழுந்துள்ளதாக சொல்கிறார்கள். வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்த இது உதவும் என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் கட்சியில் சீனியர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. முத்துச்சாமி ஈரோட்டில் வென்று இருந்தாலும் அவருக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்க வாய்ப்பு இல்லை.

எனவே வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம்பர் 2 இடத்திற்கான போட்டியில் உள்ளதாக கூறுகிறார்கள். இவர் தவிர எவ வேலுவும் கூட நம்பர் 2 இடத்திற்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக சொல்கிறார்கள். இதனிடையே மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் நிதித்துறை இலாக்காவை மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நம்பர் 2 இடத்தை நிரப்புவார் என்று பிடிஎஃப் பார்மட்டில் ஒரு ஆவணம் வாட்ஸ்ஆப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதனை திமுக ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் தான் தயாரித்து சுற்றலில் விட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் நம்பர் 2 இடத்தின் மீது பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒரு கண் உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரை தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய கே.என்.நேருவை தான் நம்பர் 2 இடத்தில் நியமிப்பார் என்கிறார்கள். அதே சமயம் சபாநாயகர் பதவி மீது துரைமுருகனுக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் அமைச்சர் பதவிக்கு காய் நகர்த்துவதாகவும் சொல்கிறார்கள். எனவே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் நம்பர் 2 இடம் யாருக்கு என்கிற கேள்வியே எழாது.

click me!