மக்களே கவனம்.. நாளை முதல் மாநகர பேருந்துகளில் கட்டுப்பாடு.. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டு

By Ezhilarasan BabuFirst Published May 5, 2021, 11:26 AM IST
Highlights

இதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கின்ற வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2500 கீழ் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. 

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிக அளவில் பரவி வரும் நிலையில், நாளை முதல் மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள மு.க ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அதன்பிறகு கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது 23 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று விகிதம் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளது, மே 3ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உயர்ந்துள்ளது. எனவே நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மே 6ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் 20 ஆம் தேதி அதிகாலை 4 மணிவரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அனைத்து பொது போக்குவரத்துக்களிலும் 50 இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணம் செய்ய முடியும். பலசரக்கு கடைகள், மளிகை கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர  பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிக அளவில் பரவி வருவதை தடுக்கின்ற வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2500 கீழ் தமிழ்நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 3-5-2021 அன்று தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும்  தீவிரப் படுத்திட 6-5-2021 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் பயணிகள் உரிய முகக்கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!