தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க ஸ்டாலின்.. ஆளுநரிடம் அமைச்சரவை பட்டியலையும் வழங்கினார்.!

By vinoth kumarFirst Published May 5, 2021, 11:17 AM IST
Highlights

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவு கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

நடத்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்க உள்ளது.இந்நிலையில், நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் 125 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றனர். அனைவரும் இணைந்து மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவைக்குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது 133 எம்எல்ஏக்களின் கையெழுத்து அடங்கிய கடிதத்தையும், அமைச்சரவை பட்டியலையும் மு.க ஸ்டாலின் ஆளுநரிடம் கொடுத்துள்ளார். நாளை மறுநாள் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

அவருக்குப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்து வைக்கிறார். மேலும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, பதவி ஏற்பு விழாவுக்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் 8 முதல் 10 பாஸ் மட்டுமே வழங்கப்பட்டு, மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!