திமுகவுடன் அமமுக ரகசிய கூட்டணி..? அதிமுகவினருக்கு சசிகலா மூலம் அழைப்பு விடும் அடிபட்ட புலி டி.டி.வி.தினகரன்?

By Thiraviaraj RMFirst Published May 5, 2021, 12:27 PM IST
Highlights

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கியது டி.டி.வி.தினகரனின் அமமுக. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிகவின் நிலைமை படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டது. 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கியது டி.டி.வி.தினகரனின் அமமுக. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்த தேமுதிகவின் நிலைமை படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டது. 

ஆனாலும் தென்மாவட்டங்களில் அதிமுக தோற்று ஆட்சி அமைக்க முடியாததற்கு காரணம் தங்கள் கட்சிதான் என மார்தட்டிக் கொள்கிறார்கள் அமமுக கட்சி தொண்டர்கள். அமமுகவுக்கு அப்படியொரு செல்வாக்கு இல்லை என்பதை மூன்றாமிடம் பிடித்த, தனித்து களமிறங்கிய நாம் தமிழர் கட்சி நிரூபத்து காட்டியதில் அமமுக அப்செட். 

அதிமுகவுக்கு முக்குலத்தோர் எதிரி இல்லை. டி.டி.வி.தினகரனுக்கு அவர் போட்டியிட்டகோவில்பட்டியில் முக்குலத்தோரே அதிகம் இருந்தும் முழு ஆதரவு அளிக்கவில்லை. அமமுக ஒரு பாஸிடிவ் சக்திஅல்ல. அது நெகடிவ் சக்திதான் என்பதை பொதுமக்கள் அறிந்துகொண்டனர். ஜெ.யின் நிழல் நிஜமாகிவிடும் என்ற கனவில் மிதந்தவர்கள் அமமுகவினர். ஜெ.இறந்துவிட காரணமானவர்கள் என்று அதிமுக தொண்டர்கள் எடுத்த முடிவுதான் இந்த சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். பணபலம் மட்டும் அதிமுகவை கைப்பற்ற போதும் என்ற நினைப்பை இத்தேர்தல் முடிவு உடைத்துவிட்டது. திமுகவுடன் கொண்ட ரகசிய கூட்டணியால் தன் அடையாளத்தையும் இழந்து நிற்கிறார் டி.டி.வி.தினகரன். 

அதிமுக அமைச்சரவையில் இருந்து போட்டியிட்ட முக்குலத்தோர் அமைச்சர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளது எப்படி? வன்னியர் பகுதியில் வன்னிய சமூக அமைச்சர்கள் தோல்வி. முக்குலத்தோர் என்பதெல்லாம் அரசியல் விழிப்புணர்வுடன் இல்லை. ஓட்டுக்கு காசு வாங்கும் பட்டியலில்தான் முக்குலத்தோரும், அரசியல் வெற்றியை தனக்கு சாதகமாக பீற்றிக்கொள்ளும் குணம் இருப்பதால் தோல்விக்கு பிறகு பெருமை பேசுகிறது இந்த அமமுக.

இப்படி இருக்கையில், டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரினிக்கும், கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமணம் பேசிமுடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் சுவாமிமலையில், நிச்சயதார்த்தம் நடந்தது. சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது அப்போது உறுதியாகத் தெரியாமல் இருந்ததால் திருமண தேதி அப்போது உறுதிசெய்யப்படவில்லை. ஆனால், சித்தி தலைமையில் தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் தினகரன்.

இந்த நிலையில், ஜூன் 13-ம் தேதி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் திருமணத்துக்கு நாள் குறித்திருக்கிறார்கள். கரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதும் இந்த திருமணத்துக்காக 5 ஆயிரம் பத்திரிகைகளை அச்சடித்திருக்கிறார்களாம். இதையே சாக்காக வைத்து அதிமுகவிலுள்ள தங்களது விசுவாசிகள் சிலருக்கும் அழைப்பு அனுப்பும் முடிவில் இருக்கிறதாம் சசிகலா தரப்பு. இந்தத் திருமண விழாவுக்குப் பிறகு சசிகலாவை மையப்படுத்திய அரசியல் நடவடிக்கைகளும் வேகமெடுக்கும் என்கிறார்கள்.

click me!