முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 26,022 வழக்குகள்.. தமிழக காவல் துறை அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Apr 23, 2021, 12:02 PM IST
Highlights

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 14 ஆயிரத்து 175 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நேற்று மட்டும் 26 ஆயிரத்து 022 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 14 ஆயிரத்து 175 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நாடுமுழுவதும் நாளொன்றுக்கு சராசரியாக இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் தினசரி பாதிப்பு  12 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வழிபாட்டுத்தலம், பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக அரசு பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முககவசம்,சமூக இடைவெளியை பின்பற்றாதவருகளிடம் இருந்து அபராத தொகையை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழகம் முழுவதும் கொரோனா முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து நேற்று மட்டும் 26 ஆயிரத்து 022 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 

கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை முகக் கவசம் அணியாதவர்கள் மீது 5 லட்சத்து 14 ஆயிரத்து 175 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நேற்று மட்டும் 710 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கடந்த 8 ஆம் தேதி முதல் இதுவரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 218 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 

click me!