‘என் மகனையும், அமித்ஷா மகனையும் விட்டுராதீங்க...விசாரிக்கனும்’ யஷ்வந்த் சின்கா சொல்கிறார்

Asianet News Tamil  
Published : Nov 10, 2017, 09:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
‘என் மகனையும், அமித்ஷா மகனையும் விட்டுராதீங்க...விசாரிக்கனும்’ யஷ்வந்த் சின்கா சொல்கிறார்

சுருக்கம்

yaswanth sinha press meet

புகார் என்று வந்துவிட்டால் என் மகனோ, அமித்ஷாவின் மகனோ, அல்லது யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா கூறி இருக்கிறார்

கடும் விமர்சனம்

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பிரதமர் மோடியையும், அருண் ஜேட்லியையும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடை நடவடிக்கையில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அதற்கு அவர் மகன் ஜெயந்த் சின்கா (தற்போதைய மத்திய அமைச்சர்) பதில் அளித்து இருந்தார்.

‘பனாமா பேப்பர்ஸ்’

சமீபத்தில் ‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ என்னும் புலனாய்வுத் தகவல் அறிக்கை வெளியானது. அதில் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்தவர்களின் பல பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

அதில் யஷ்வந்த் சின்ஹாவின் மகனும், தற்போதைய பா.ஜ.க. அரசின் அமைச்சருமான ஜெயந்த் சின்கா பெயரும் இடம் பெற்றிருந்தது.

அனைவரிடமும் விசாரணை

அதற்கு ஜெயந்த் சின்கா தமக்கும் அந்த முதலீடுகளுக்கும் சம்மந்தம் இல்லை என்று, தாம் முன்பு பணி புரிந்த நிறுவனம் அந்த முதலீடுகளைச் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து என்டிடிவிக்கு பேட்டி அளித்த யஷ்வந்த் சின்கா, ‘‘பாரடைஸ் பேப்பர்ஸ் தகவலில் இடம் பெற்றுள்ள அனைவரின் பேரிலும் விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

அமித்ஷா மகன்..

அதுவும் 15 நாட்களில் இருந்து ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். இதில் என் மகனின் மேலுள்ள புகாரையும் விசாரிக்க வேண்டும்.

அதே போல சமீபத்தில் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா பற்றி எழுந்துள்ள புகாரைப் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.

புகார் என்று வந்தால் ஜெயந்த் சின்காவும், ஜெய் ஷாவும் ஒன்றுதான். யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்’’ என கூறினார்.

குழப்பமான ஜி.எஸ்.டி.

மேலும் ஜி எஸ் டி பற்றி கேட்கப்பட்ட போது, "அது முழுக்க முழுக்க குழப்பமான ஒன்று. அதை சரி செய்வது என்பது இயலாத காரியம். அதை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும். பட்டி, டிங்கரிங்க் வேலை பார்க்கும் அளவுக்கு ஜி எஸ் டி இல்லை." எனக் கூறி உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

சோனியாவின் மிரட்டல்... பணிந்த ராகுல்..! கனிமொழி நடத்திய ரகசிய டீலிங்கில் சிக்கிய காங்கிரஸ்..!
பனையூரில் அவமானம்... அறிவாலயத்தில் தஞ்சம்? செங்கோட்டையனின் ‘சைலண்ட்’ மூவ் - அதிர்ச்சியில் விஜய்..!