ஜெய்பீம் படத்தில் வட்டாரமொழி வசனத்தில் பங்காற்றி அதற்கான ஊதியத்தை படக்குழுவுக்கே திருப்பி தந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஜெய்பீம் படத்தில் வட்டாரமொழி வசனத்தில் பங்காற்றி அதற்கான ஊதியத்தை படக்குழுவுக்கே திருப்பி தந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஏறக்குறைய 3வது வாரமாக ஜெய்பீம் படத்தின் சர்ச்சை ஓடிக் கொண்டு இருக்கிறது. தோண்ட, தோண்ட பூதம் வந்த கதையாக ஜெய்பீம் படம் பற்றி நாள்தோறும் ஏதேனும் ஒரு செய்தி, சர்ச்சை என்று வெடித்து கிளம்பிக் கொண்டே இருக்கிறது.
அதில் இன்றைய லேட்டஸ்ட் டுவிஸ்ட் தான் இதுவரை ஜெய்பீம் படம் பற்றிய திருப்பத்திலே பெரிய டுவிஸ்ட் என்று கூறலாம். வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கதாபாத்திரத்தின் பெயர், காட்சி அமைப்புகள் என தொடர்ந்து சர்ச்சைகளில் உழன்று கொண்டிருந்த ஜெய்பீம் படத்தின் அடுத்த அதிரடியாக எழுத்தாளர் கண்மணி குணசேகரன் இந்த படத்துக்காக தான் பெற்ற ஊதியம் 50 ஆயிரத்தை படத்தயாரிப்பு நிறுவனத்துக்கே திருப்பி அளித்து இருக்கிறார்.
கண்மணி குணசேகரன் யாருமல்ல… தமிழகத்தின் ஆக சிறந்த எழுத்தாளர். கவிதை, கதை, நாவல் என பரந்துபட்ட உலகத்தில் வெற்றிக்கொடி கட்டியவர். வட்டார மொழி இலக்கியத்தில் வல்லவர்.
இவர்தான் ஜெய்பீம் படத்தின் வசனங்களை வட்டார வழக்கில் திருத்தம் செய்து கொடுத்தவர். அதற்காக பெற்ற ஊதியத்தை இப்போது தயாரிப்பு நிறுவனத்துக்கு வாயால் சொல்லாமல், காசோலையாக அனுப்பி தமது நேர்மையை நிலைநாட்டி இருக்கிறார்.
எலிவேட்டை என்ற தலைப்பாக இருந்ததாலும், தமக்கு காட்டப்பட்ட உரையாடல் பிரதியில் இருளர்களின் வாழ்வியலோடு கூடிய எலி வேட்டை என்று இருந்ததன் காரணமாக பிரதியில் கவனம் ஊன்றி படிக்கவில்லை என்று நீண்ட விளக்கத்தை அளித்து ஜெய்பீம் படக்குழுவுக்கு சம்மட்டி அடி அடித்திருக்கிறார். ஜெய்பீம் பட சர்ச்சையில் நிகழ்ந்துள்ள இந்த எதிர்பாராத திருப்பத்துக்கு இணைய உலகில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. வெகுண்டு எழுந்துள்ள டுவிட்டராட்டிகள் கண்மணி குணசேகரனுக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து தள்ளி இருக்கின்றனர்.
இது ஜெய்பீம் அல்ல பொய்பீம் என்று படக்குழுவின் முகத்திரை கிழித்து எறிந்து விட்டார் என்று ட்விட்டரில் பாராட்டுகள் குவிகின்றன. சமுதாய பற்றாளர் என்பதை நிரூபித்து விட்டார் என்றும், தம்மை ஏமாற்றி எழுத வைத்து அதற்கு கொடுத்த காசை விட்டெறிந்த ரோஷக்காரர் என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
ஒரு படைப்பாளியால் இதைவிட அழுத்தமான படைப்புகளை தரமுடியும், ஜெய்பீம் படக்குழுக்கு கண்மணி குணசேகரன் தந்த செருப்படி என்றும் சிலாகித்து வருகின்றனர். மானத்தை காட்டிலும் எங்களுக்கு பணமோ, புகழோ பெரியது அல்ல என்றும் மாலையிட்டு வாழ்த்ததாக குறையாக அகமகிழ்ந்து வருகின்றனர்.
இன்னும் ஒரு சிலரோ முதுகில் குத்திய சூர்யா குழுவின் முகத்தில் குத்துவிட்டிருக்கிறார் என்று அதிரடியாக பதில் தந்து கொண்டு இருக்கின்றனர். ஷத்ரிய கவிஞர், எழுத்தாளர் என்பவருக்கு இதைவிட நேர்மை இருக்க முடியுமா என்று கேள்வி கேட்டும் கொண்டாடி வருகின்றனர்.