கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று என் சமாதியில் எழுதுங்கள்... துரைமுருகன் நெகிழ்ச்சி!!

By Narendran SFirst Published Mar 29, 2023, 6:15 PM IST
Highlights

எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும் என அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும் என அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 1989 ஆம் ஆண்டில் இருந்து நீர்வளத்துறையில் எத்தனை முறை பேசி இருப்பேன். எவ்வளவு கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பேன் என்று எனக்கு தெரியாது. மூத்தவன் என்ற முறையில் கலைஞர் என்ன துறை வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது, குடியானவர்களுக்கும், விவசாயிகளுக்கும் எதாவது செய்யமுடியும் என்றால் அதற்கு நீர்வளத்துறை தான் வேண்டும் என்று கலைஞரிடம் தெரிவித்தேன்.

இதையும் படிங்க: பாஜக கல்வியாளர் பிரிவு மாநில செயற்குழு கூட்டம்... நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன தெரியுமா?

பொதுப்பணித்துறை போன்று பெயர் இருக்காதே என்று கலைஞர் சொன்னபோது பெயர் எதற்கு என்று குடியானவர்களுக்கு எதாவது செய்தால் போதும் என்று கூறினேன். 1 பைசா மின்கட்டண உயர்வை கண்டித்து பெருமாநல்லூர் போராட்டம் நடந்த நிலையில், கலைஞர் இனி ஒரு பேசா கூட மின்கட்டணமாக விவசாயிகள் செலுத்தவேண்டியதில்லை என்று கூறிய அதற்கான பணிகளை தன்னிடம் ஒப்படைத்து நிறைவேற்றப்பட்டதற்கு கலைஞருக்கு நன்றி.

இதையும் படிங்க: ராகுல் தகுதி நீக்கம் விவகாரம்... ஒரு மாத தொடர் போராட்டத்தை அறிவித்தது தமிழக காங்.!!

எல்லோருக்கும் மறைவு வரும், அப்படி தான் மறையும் போது எனது சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதவேண்டும். அது போதும். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்தில் ஆளுநர் எவ்வளது வயது எனக்கு என்று முதலமைச்சரிடம் கேட்டபோது என் அப்பாவுடன் இருந்தவர் என்று பெருமையாக கூறினார். அப்போது உதயாவின் மகனுடனும் நான் இருப்பேன் என்று தெரிவித்தேன். மூத்த உறுப்பினர் என்ற முறையில் எதிர்கட்சி உறுப்பினர்களும் எனக்கு தரும் மரியாதைக்கு அனைவருக்கும் நன்றி என்று மிக உருக்கமாக பேசினார். 

click me!