வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணி..!! தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு நாளை ஆலோசனை.

By Ezhilarasan BabuFirst Published Sep 2, 2020, 2:54 PM IST
Highlights

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதாசாகு நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி  சத்யபிரதாசாகு நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக மாலை 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

நவம்பர் 16  ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட இருப்பதால், இரட்டை பதிவுகள் சரிபார்ப்பு, வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு இக்கூட்டத்தில்  ஆலோசிக்க வுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த வேண்டி உள்ளது. மேலும் புதிதாக பெயர் சேர்ப்பது, நீக்குவது, பிழை திருத்துவது  போன்ற பணிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்படுவது வழக்கம்.

அதற்கு முன்பு அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படவேண்டும். எனவே  தற்போது கொரோனா  தொற்று பரவல் இருப்பதால்  இடம்  தேர்ந்தெடுத்த பின்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28 ம் தேதி உயிரிழந்த கன்னியாகுமரி  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தொகுதி காலியாக இருப்பது தொடர்பாக  தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்ததலைமைக்கு தெரிவித்துள்ளார்.

 

click me!