நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.நகர் ஓட்டல் அக்கார்டில் நடைபெற்றது.
இனி எந்த எக்காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறிள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.நகர் ஓட்டல் அக்கார்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இதையும் படிங்க;- திமுகவை ஆட்டிப்படைக்கும் ரெய்டுகள், உட்கட்சி பூசல்: தேர்தல் பணிகளில் சுணக்கம்!
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்;- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, விடியல் பயணம் வரை மகளிருக்கு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். செல்லும் இடங்களில் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன். இனி எந்த எக்காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குதான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை என்றார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யார் வெற்றி பெறுவாரோ அவரே வேட்பாளராக இருப்பார். இவர்தான் இந்த தொகுதிக்கு என்று எதுவுமில்லை.
மேலும் பேசிய முதல்வர் இளைஞரணியின் செயலாளராக 2019ம் ஆண்டு உதயநிதி பொறுப்பேற்ற பிறகு அணியின் பணிகள் பன்மடங்கு வேகம் எடுத்திருக்கின்றன. இன்றைய தேதியில் 25 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வலுவான படையாக இளைஞரணி திகழ்கிறது. இளைர்களையும் , புதிய வாக்காளர்களையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக திமுக திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலமாக நிரூபித்துக் காட்ட வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தலா ஆயிரம் இளைஞர்களாவது கலந்து கொள்ளும் பிரமாண்டமான மாநாடாக சேலம் மாநாடு அமைந்திடல் வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.