மகளிருக்கான இலவச பயணம்... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது போக்குவரத்துறை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 19, 2021, 12:24 PM IST
Highlights

தற்போது மகளிருக்கான இலவச பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது


தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின்  முதல் நாளே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் கடந்த 8ம் தேதி முதல் பயணிக்க பயணித்து வருகின்றனர். 

பெண்களுக்கு குழப்பத்தை போக்கும் விதமாக நகரப் பேருந்துகளில் மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற அறிவிப்பும் ஒட்டப்பட்டது. தற்போது மகளிருக்கான இலவச பயணத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. 

அதில் பேருந்திற்காக நிற்கும் போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும், ஒருவர் நின்றாலும் பேருந்தை நிறுத்த வேண்டும்,  வயதான மகளிர்களுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும், பேருந்தில் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. பேருந்தில் பெண் பயணிகளிடம் உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 

click me!