உங்க பொண்ண பிச்சை எடுக்க விடலாமா?: லஞ்ச துணைவேந்தர் மனைவியை துளைத்தெடுத்த பெண் போலீஸ்!

Asianet News Tamil  
Published : Feb 05, 2018, 02:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
உங்க பொண்ண பிச்சை எடுக்க விடலாமா?: லஞ்ச துணைவேந்தர் மனைவியை துளைத்தெடுத்த பெண் போலீஸ்!

சுருக்கம்

Woman to begging for your daughter Bribe

தமிழகத்தின் மிகப்பெரிய ‘பிரேக்கிங்’ விவகாரமாய் பார்க்கப்படுகிறது கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, லஞ்சம் பெறுகையில் கையும் களவுமாய் பிடிபட்ட விவகாரம். சமூக வலைதளங்களிலும், கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டங்களிலும் காறித்துப்பாத குறையாக துணைவேந்தரையும், அவருக்கு லஞ்ச லாவண்யத்தில் உதவியாய் நின்று சேவை புரிந்த உயர்கல்வி அல்லக்கைகளையும் வெளுத்து வாங்குகிறார்கள்.

தமிழனுக்கு உயர்கல்வித்துறை சீர்கேடுகள் மீது எந்தளவுக்கு ஆத்திரமும், ஆதங்கமும் இருக்கிறது என்பதை இந்த விவகாரத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ், துணைவேந்தர் கணபதியை வளைத்துப் பிடித்தபோது அவரது வீட்டினுள் நிகழ்ந்த சம்பவங்கள் மெதுவாக இப்போது கசியத் துவங்கியுள்ளன.

உதவி பேராசிரியர் சுரேஷ், லஞ்சமாக கொடுத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கணபதியின் கொடுத்திருக்கிறார். அந்தப் ஒரு டாக்டர். அவர் அதை பீரோவில் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சுற்றி வளைத்ததும், அவரது மனைவி சுவர்ணலதா அந்தப் பணத்தை எடுத்து டாய்லெட்டுக்குள் சென்று கிழித்துப் போட்டு மறைக்க முயன்றிருக்கிறார். ஆனால் போலீஸார் இதை கவனித்துவிட்டனர். ஆபரேஷன் டீமிலிருந்த பெண் போலீஸார் சுவர்ணலதாவை தங்களின் கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது ’எவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தோட துணைவேந்தர் அவரு. அவரைப்போய் ஏதோ கிரிமினல் மாதிரி நடத்துறீங்க?’ என்று நியாயம் கேட்டாராம்.

இதில் டென்ஷனான பெண் போலீஸார் சொர்ணலதாவை பிடிபிடியென கேள்விகளால் பிடித்துவிட்டார்களாம். ”தன்னோட தாலி தங்கத்தை கூட அடமானம் வெச்சு பையன், பொண்ணை பி.ஹெச்.டி. படிக்க வெக்கிற அம்மாக்கள் எத்தனையோ பேர் இங்கே இருக்கிறாங்க. நாய் படாத பாடு பட்டு படிச்சு, நல்ல மார்க் வாங்கி, பேராசிரியர் பணிக்கான முழு தகுதியோட வந்து நிக்கிறாங்க அந்த் பிள்ளைங்க.

ஆனா தகுதி உள்ள ஆளுங்களுக்கு வேலையை கொடுக்காம லட்சம், லட்சமா பணத்தை வாங்கிக்கிட்டு தகுதியில்லாதவனுக்கெல்லாம் உங்க வூட்டுக்காரர் வேலை கொடுப்பாரு. பைபாஸ்ல அவரு சம்பாதிச்ச பணத்தை வீட்டு பீரோவுல அடுக்கி வைச்சப்போ வெட்கமா இல்லையா உங்களுக்கு?

தகுதி இருந்தும் லெக்சரர் வேலை கிடைக்காமல் நர்சரி ஸ்கூல்ல பொழப்ப பார்க்கிற பொண்ணுங்களை நாங்க காட்டட்டுமா. இந்த பாவத்தை பண்ணினது யாரு? உங்க புருஷன் தானே! அந்தப் பொண்ணுங்களை பெத்தவங்க மனசு எப்படியெல்லாம் அழுதுருக்குக்கும்! நோகாம சம்பாதிச்ச பணத்துல உங்க பொண்ணை டாக்டருக்கு படிக்க வெச்சிருக்கீங்களே! அந்தப் பொண்ணு டாக்டர் வேலை கிடைக்காம பிச்சை எடுத்தால் உங்க மனசு கதறித்துடிக்காதா!?

ஊர் சாபத்தை வாங்கிக் கட்டிட்டு இப்போ  நியாயமா பேசுறீங்க?” என்று கேட்க வாயடைத்து நின்றாராம் சுவர்ணலதா.
தட் கடவுள் இருக்கான் கொமாரு! மொமெண்ட்.

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!