தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து குடும்பம் வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜை செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில். இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து குடும்பம் வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. குறிப்பாக அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க லட்சக்கணக்கான பொது மக்கள் ராமேஸ்வரத்தில் திரள்வது வழக்கம்.
இதையும் படிங்க: திருநள்ளாறு கோயில் கொடிமரம் முறிவு.. பிரம்மோற்சவ கொடியேற்று விழா நிறுத்தம்!
இந்நிலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் ரூ.400 வரை வசூலிக்கப்படும் எனவும் அதில் இருந்து ரூ.80, ரூ.160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பிலும் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பங்குனி உத்திரம் 2024 : வழிப்பாட்டு முறைகள்.. விரத முறை மற்றும் பலன்கள்.. இதோ !!
இந்நிலையில் பரிகார பூஜை கட்டண அறிவிப்பை திரும்ப பெறுவதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை மார்ச் 20-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் பிப்ரவரி 28ம் தேதி அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.