PM Modi withdraws 3 farmlaw: 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்ற கையோடு விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

By vinoth kumarFirst Published Nov 19, 2021, 9:52 AM IST
Highlights

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். 

மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால், டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது. இது பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் சிறு குறு விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் கூறி விவசாயிகள் டெல்லியின் புறகநகர் பகுதிகளில் உள்ள சாலையில் அமர்ந்து போாரட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் பல்வேறு சுற்றுப் பேச்சுவாரத்தைகளை மத்திய அரசு நடத்தியும் எந்தத்தீர்வும்  எட்டப்படவில்லை. இதனால், ஆயிரகணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 3 வேளாண் சட்டங்களை  திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களிடம் உரையாற்றி பிரதமர் மோடி;- விவசாயிகளின் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம். நமது நாட்டில் உள்ள விவசாயிகளில் 100ல் 80 பேர் சிறு விவசாயிகள். விவசாயிகள் சந்தித்து வரும் சவால்களை நான் கவனித்து வருகிறேன். அரசின் முயற்சிகளால் விவசாய விளைபொருட்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. ஆகையால், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன.  போராட்டம் செய்து வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். 

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கெல்லாம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதால் பாஜக வெற்றி பெறுவதற்கு மிகவும் சிரமம் என்று தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியன் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!