#JaiBhim படமே பாக்கல… ஆனா இவ்ளோ பேச்சா..? ஹெச். ராஜாவை டரியலாக்கும் நெட்டிசன்கள்..

By manimegalai aFirst Published Nov 19, 2021, 9:03 AM IST
Highlights

அது என்ன ஜெய்பீமா..? படமா..? நான் இன்னமும் அதை பாக்கல.. ஆனா காலண்டர் வச்சது தப்புங்றேன் என்று கூறிய ஹெச். ராஜாவை நெட்டிசன்ஸ் உண்டு, இல்லை என்று ஆக்கி வருகின்றனர்.

அது என்ன ஜெய்பீமா..? படமா..? நான் இன்னமும் அதை பாக்கல.. ஆனா காலண்டர் வச்சது தப்புங்றேன் என்று கூறிய ஹெச். ராஜாவை நெட்டிசன்ஸ் உண்டு, இல்லை என்று ஆக்கி வருகின்றனர்.

திரையுலகம் இப்போது இருக்கும் சூழலில் படம் எடுப்பதே பெரும் கஷ்டம். அப்படியே எடுத்தாலும் அதை ரிலீஸ் செய்து போட்ட முதலீட்டை லாபமாக்குவது அதை விட கஷ்டம்.

நிலைமை இப்படி இருக்க.. ரிலீசான படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து போராட்டம், அரசியல்வாதிகள் பேட்டி, தியேட்டர்களுக்கு மிரட்டல் என்று வந்தால் எப்படி இருக்கும்…?

அப்படித்தான் ரிலீசான ஒரு வாரம் கழித்து தற்போது வரை பெரும் சர்ச்சையாகி இருக்கும் படம் ஜெய்பீம். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள படத்தில் வரும் சில கதாபாத்திரங்கள், காட்சிகள், பின்னணியில் தெரியும் சில விஷயங்கள் பாமகவையும், வன்னியர் சங்கத்தையும் ஏகத்துக்கும் கொதிக்க வைத்திருக்கிறது.

அன்புமணியின் 9 கேள்விகள், வன்னியர் சங்கத்தின் எதிர்ப்பு என நாள்தோறும் ஜெய்பீம் படம் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. நடிகர் சூர்யா ரசிகர் மன்றம் கலைப்பு, ரசிகர்கள் போராட்டம் என வேறு ஒரு பக்கம் பிரச்சனைகள் வெடித்து வருகின்றன.

போதிய அளவுக்கு பாமகவுக்கும், வன்னியர் சங்கத்தினருக்கும் நடிகர் சூர்யா பதில் அளித்துவிட்ட போதிலும் எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. பாமக மட்டும் இல்லை, அதன் கூட்டணி கட்சியான பாஜகவும் இப்படத்தை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த படம் பற்றி அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துவிட்டாலும் சர்ச்சைகளின் நாயகனாக ஹெச். ராஜாவின் பார்வை எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர். அவரும் வழக்கம் போல் தமது சூடான கருத்தை வெளியிட்டு உள்ளார்.

அவர் கூறியது இதுதான்: அதென்ன ஜெய்பீமா..? நான் இன்னும் இந்த படத்தை பாக்கல. ஜெய்பீம் படம் உண்மை சம்பவம். படத்தில் ராஜாக்கண்ணு பெயர் ராஜாக்கண்ணு, சந்துரு பெயர் சந்துரு என வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்தோணி சாமி என்ற கதாபாத்திரத்தின் பெயர் மட்டும் எப்படி குருமூர்த்தியாக மாறியது?

ஜெய்பீம் படத்தில் எந்த காலண்டரும் இருக்கக்கூடாது. காலண்டர் வைப்பேன் என்றால் இயேசுநாதர் காலண்டர் வையுங்கள், மகாலட்சுமி காலண்டர் வேண்டாம். இந்துமதம் என்றால் அவ்வளவு இளக்காரமாக போய்விட்டதா?

இந்த சினிமாக்காரன் ராஜராஜ சோழனையும் விடமாட்டேங்கிறான். ஹெச். ராஜாவையும் விடமாட்டேங்கிறேன். படத்தின் மூலம் வன்னிய குல சத்திரியர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் சண்டை மூட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் படம் எடுக்கப்பட்டு உள்ளது  என்று பொங்கி தள்ளி இருக்கிறார்.

ஜெய்பீம் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது அவரது அரசியல்சார்பு, கொள்கை சார்பு என்ற வரையறைக்குள் வைத்திருந்தாலும் நெட்டிசன்களும், நடுநிலையாளர்களும் இங்கே ஒரு கருத்தை வலுவாக முன் வைக்கிறார்கள்.

பெரும் பேசு பொருளாக மாறியிருக்கும் ஜெய்பீம் படத்தை பார்க்காமல் அந்த படத்தை பற்றி கடுமையாக விமர்சனம் வைப்பது எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர். படத்தை பார்க்காமல் அந்த படத்தை நொடிக்கு நொடி பார்த்தது போன்று இப்படி சீற்றத்துடன் விமர்சிப்பது எப்படி சரி என்று ஹெச். ராஜாவை பிடித்து உலுக்கி வருகின்றனர்.

படமே பாக்கல.. அதுக்குள்ள இந்த பேச்சா….? வாயை கொடுத்து கோர்ட் வரைக்கும் போனது மறந்துபோய்விட்டதா என்று அவரை போட்டு நெட்டிசன்கள் நொங்கெடுத்து வருகின்றனர். படம் பாக்காம அள்ளி விடுகிறார் என்றும் இணையத்தில் தாளித்து எடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்….!

இதே கேள்வியை தான் நடுநிலையாளர்கள் தரப்பில் இருந்தும் முன் வைக்கப்படுகிறது. ஒரு கருத்தை முன் வைக்கும் போது அது பற்றிய தெளிவான புரிதல், அறிதல் இல்லாமல் படமே பார்க்காமல் பார்த்தது போன்று விமர்சித்து, பின்னர் அந்த படத்தை பார்க்கவில்லை என்று கூறி அதை விமர்சிப்பது அழகல்ல என்றும் கருத்துகளை கூறி வருகின்றனர்..!!

click me!