Big Breaking: #FamLaws | மூன்று புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்… பிரதமர் நரேந்திரமோடி அதிரடி அறிவிப்பு..

By manimegalai aFirst Published Nov 19, 2021, 9:36 AM IST
Highlights

புதிய வேளாண் சட்டங்களின் நலனை மகக்ளுக்கு விளக்குவதில் தமது அரசு தோல்வியடைந்து விட்டது. ஆனாலும் தொடர்ந்து விவசாயிகளுக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களின் நலனை மகக்ளுக்கு விளக்குவதில் தமது அரசு தோல்வியடைந்து விட்டது. ஆனாலும் தொடர்ந்து விவசாயிகளுக்காக பாடுபடுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டம் என்று பிரதமர் மோடி ஓராண்டாக கூறிவரும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்திய போராட்டம் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. செங்கோட்டை முற்றுகை, டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பல மாதங்களாக சாலைகள் மூடல் என விவசாயிகள் போராட்டம் பெரும் வரலாற்றை கடந்து வந்துள்ளது.

இந்தநிலையில் தான் இன்று காலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். கார்த்திகை தீப திருநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர், இதற்கான மசோதா எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

விவசாயிகள் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. அதன் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்குவதில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் வீட்டுக்குச் செல்ல வேண்டும். அவர்கள் மீண்டும் விவசாய பணிகளை தொடங்க வேண்டும். விவசாய மக்களுக்காக தமது அரசு தொடர்ந்து போராடும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நூற்றுக் கணக்கான விவசாயிகள் இற்னதுள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபப்ட்டுள்ளார். கொரோனா, மழை, வெயில், குளிர் எதையும் பொருட்படுத்தாமல் போராடி வந்த விவசாயிகளுக்கு பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இரண்டாவது சுதந்திர போராட்டம் என்று கூறப்படும் வகையில் விவசாயிகள் போராட்டம் அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.

click me!