கண்ணில் பட்டதையெல்லாம் விற்பீர்களா.? இது பச்சை தேச துரோகம்.. மத்திய அரசை டாராக்கிய தமிழக எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 11:05 AM IST
Highlights

இப்படி தரப்படும் உரிமைகளில் தனி உரிமைகளும் (Exclusive Rights) அடங்கும். இது அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல, சமூகத்தின் மீது நீண்டகால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சனை,

வரலாற்று ஆவணங்களை விற்பது தேசத்துரோகம் என்றும், எனவே பிரசார் பாரதியின் முடிவை கைவிடுமாறு  ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்களுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:  தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு அக்டோபர் 8 அன்று முடிவெடுத்துள்ளது. முக்கிய ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும். 

இதையும் படியுங்கள்: அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

நிகழ்கால அரசியல் தேவைகளுக்கான வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது, இந்திய வரலாற்றின் நிகழ்வுகள், அதன் காலம் சூழல் சாராது தவறாக பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது. இந்த சேமிப்பு ஆவணங்களுக்கு சந்தையில் நல்ல விலையும் தேவையும் இருப்பதால் அதை பணமாக்க போவதாக பிரசார் பாரதி அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: முதல்வருக்கு அடுத்தடுத்து போன் போட்ட பிரதமர் மோடி, அமித்ஷா.. நம்பிக்கை கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை.

இப்படி தரப்படும் உரிமைகளில் தனி உரிமைகளும் (Exclusive Rights) அடங்கும். இது அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல, சமூகத்தின் மீது நீண்டகால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சனை, கண்களில் படுவதெல்லாம் விற்கக்கூடாது, கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாறு, ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன். என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. 

 

click me!